புது டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு அரசியல் நெருக்கடி வலுத்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிறப்பு விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) காலை 6.20 மணிக்கு சூரத்தில் இருந்து கவுகாத்தி சென்றடைந்தார். இருப்பினும், சிவசேனாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தனக்கு 6 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால் அதற்கு முன் சூரத் ஹோட்டலில் வந்த குரூப் படத்தில் மொத்தம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் இருந்த எம்எல்ஏக்கள் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
ஏக்நாத் ஷிண்டே
பிரதாப் சர்நாயக்
ஸ்ரீனிவாஸ் ஒனேகா
அனில் பாபர்
நிதின் தேஷ்முக்
லதா சோனாவனே
யாமினி ஜாதவ்
சஞ்சய் சிர்சாத்
மகேந்திர தல்வி
பாரத் கோகவாலே
பிரகாஷ் சர்வே
சுஹாஸ் காண்டே
பச்சு காடு (சுயேச்சை)
நரேந்திர பொண்டேகர் (சுயேச்சை - அமராவதி)
சஞ்சய் கெய்க்வாட்
சஞ்சய் ராய்முல்கர்
பாலாஜி கிண்ஹிகர்
ரமேஷ் போர்னாரே
சிமன்ராவ் பாட்டீல்
கிஷோர் பாட்டீல்
நிதின்குமார் கீழ்
சண்டிபன் பும்ரே
மகேந்திர தோர்வ்
ராஜ்குமார் படேல் (சுயேச்சை)
ஷான்ராஜ் சௌகுலே
பிரதீப் ஜெய்ஸ்வால்
பிரகாஷ் அபித்கர்
ஷாஜி பாட்டீல்
விஸ்வநாத் போயர்
சாந்தாராம் மோர்
தானாஜி சாவந்த்
மகேஷ் மோரே
ஷம்புராஜே தேசாய்
உதய்சிங் ராஜ்புத்
அப்துல் சத்தார்
சிவசேனாவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையம் சென்றடைந்ததும், விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் மூன்று பேருந்துகளில் ராடிசன் புளூ ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,.
கவுகாத்தி விமான நிலையத்தில் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் ஒருமுறை "பாலாசாகேப் தாக்கரேவின் "இந்துத்துவாவை" முன்னெடுத்துச் செல்வேன்" என்று கூறினார். முன்னதகா பாலாசாகேப் தாக்கரேவின் இந்துத்துவாவை விட்டு விலகவில்லை என்று சூரத் விமான நிலையத்திலும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தவ் தாக்கரே பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார்.
மறுபுறம், ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறினார். காலையில் ஒரு மணி நேரம் அவருடன் உரையாடியதாக சஞ்சய் ராவத் கூறினார். நேற்றும் இன்றும் பேசினோம். ஏக்நாத் ஷிண்டே எந்த நிபந்தனையையும் எங்கள் முன் வைக்கவில்லை. அதேநேரத்தில் சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றும் வாய்ப்பு இல்லை. சிவசேனா உடையும் பேச்சுக்கே இடமில்லை என்று சஞ்சய் ராவத் கூறினார். யாருடனும் சமரசம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. அப்படி செய்தவதை விட ஆட்சியை இழப்பது மேல் என்று கூறினார். இங்கு அதிகாரம் நிலையானது இல்லை. இன்று நாங்கள் அதிகாரத்தை இழக்கலாம், அனால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்பதையும் மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: சிக்கலில் மகாராஷ்டிர அரசு: சிவசேனா எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் முகாம்
மகாராஷ்டிரா அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மும்பை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறினார். சரத் பவாரை சந்திக்க உள்ளதாக கமல்நாத் தெரிவித்துள்ளார்.
நமக்கு கிடைத்த தகவலின் படி, உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவை சகாக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR