மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு சாதகமாய் அமைந்துள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 623.33 புள்ளிகள் உயர்ந்து 39,434.72 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 187.05 புள்ளிகள் உயர்ந்து 11,844.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்தது.
மும்பை பங்குச்சந்தையில் ரியாலிட்டி, ஆட்டோமொபைல், டெலிகாம், வங்கி, கட்டுமானம், நிதி, மெட்டல், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெக், ஐ.டி., ஆற்றல் என அனைத்துத் துறை பங்குகளும் நல்ல லாபத்துடன் முடிவடைந்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.66% உயர்ந்து 69.57 ரூபாயாக உள்ளது.
அதே வேளையில் கச்சா எண்ணெய் நிலவரம்... பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று 4.77% குறைந்து பேரல் 67.76 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 6.06% குறைந்து 57.91 டாலராக உள்ளது.
எனவே இந்தியாவில் தேர்தல் அறிவித்தது முதல் உயராமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் அதிகளவில் இருக்காது என்று கூறப்படுகிறது.