Why Congress defeat in Rajasthan Assembly Elections: ராஜஸ்தான் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பகால போக்குகளில், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிகிறது. பாஜக 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் 70 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சமீபத்திய போக்குகள் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறுவதைக் குறிக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க என்ன காரணம்? காங்கிரஸ் தோற்றால் அதற்கான ஐந்து காரணங்கள் என்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.
காங்கிரஸ் உட்கட்சி பூசல்
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் உட்கட்சி கோஷ்டி பூசல்களுடன் போராடி வந்தது. முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான மோதல் தொண்டர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது, பொதுமக்களிடையே தவறான செய்தி சென்றடைந்தது. இருப்பினும், தேர்தலுக்கு சற்று முன்பு, நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை இரு தலைவர்களும் வெளிப்படையாகவே அறிவித்தனர். ஆனால் அது மிகவும் தாமதமானது. காங்கிரஸ் உட்கட்சி மோதலை பாஜக சரியாக பயன்படுத்திக் கொண்டது.
கோஷ்டி மோதலுடன் காங்கிரஸ் போராடியபோது, பாஜக உட்கட்சி பூசலை மிகச் சிறப்பாகக் கையாண்டது. இரு கட்சிகளும் முதல்வர் முகத்தை அறிவிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து, முதல்வர் அசோக் கெலாட் அறிவிக்கப்படாத முதல்வர் முகமாக இருந்தார். அதே சமயம், கோஷ்டி பூசலை முறியடிக்க, வசுந்தரா ராஜேவை முதல்வராக அறிவிப்பதில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல், பெரிய தலைவர்களையும் தேர்தல் களத்தில் நிறுத்தியது பாஜக. இதன் விளைவாக, தலைவர்கள் தங்கள் நம்பகத்தன்மையை காப்பாற்ற அந்த தொகுதியில் அதிக ஆர்வம் காட்டினர் மற்றும் அதை சுற்றியுள்ள தொகுதிகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
நரேந்திர மோடி vs அசோக் கெலாட்
ராஜஸ்தான் தேர்தலை பொறுத்தவரை மோடிக்கு எதிராக அசோக் கெலாட் என்ற பிம்பம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் முகமும் காங்கிரஸின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கையின் பிரசாரத்தை மழுங்கடித்தது. பிரதமர் மோடி ராஜஸ்தானில் பிரமாண்ட தேர்தல் பேரணிகளை நடத்தியபோது, காங்கிரஸின் பிரச்சாரச் சுமை முதல்வர் கெலாட்டின் தோள்களில் அதிகமாக இருந்தது. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக களம் இறங்கிய போதும், அது வெறும் மனநிறைவாகத்தான் இருந்தது. தேர்தல் முற்றிலும் மோடி vs அசோக் கெலாட் என மாறியதால், பாஜகவும் இதனால் பலனடைந்தது.
தாக்கத்தை ஏற்படுத்திய கண்ணையாலால் கொலை வழக்கு
ராஜஸ்தான் தேர்தலில் உதய்பூர் கன்ஹையாலால் கொலை வழக்கை பாஜக அதிக அளவில் எழுப்பியது. பாஜகவின் இந்த உத்தியும் பலனளித்துள்ளது எனத் தெரிகிறது. மார்வாடி சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் உதய்பூர் வருகிறது. ராஜஸ்தான் அரசியலை பொறுத்தவரை "மேவாரில் யார் ஜெயிப்பார்களோ? அவர்களே ராஜஸ்தானை ஆளுவார்கள்" என்று கூறப்படுவது வழக்கம். இந்த பகுதியில் பாஜக வெற்றி பெறும் என தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. மேலும் கண்ணையாலால் கொலை வழக்குடன், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் இதன் பின்னணியில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது.
நல்ல மக்கள் திட்டங்களை மறைத்த ஊழல் குற்றச்சாட்டுகள்
அசோக் கெலாட்டின் அரசாங்கம் தேர்தல் நடைபெறவிருந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒன்றன் பின் ஒன்றாக தேர்தல் நகர்வை மேற்கொண்டது. சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ், ஹெல்த் இன்சூரன்ஸ் வரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்துவதாக உறுதியளித்தார். மலிவான எரிவாயு சிலிண்டர்கள் உட்பட பல இலாபகரமான திட்டங்களை அறிவித்தார். ஆனால் சிவப்பு டைரி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணங்கள் காங்கிரஸ் நல்ல திட்டங்களை மறைத்துவிட்டன.
காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய கிளர்ச்சியாளர்கள்
காங்கிரஸின் தோல்விக்கு கிளர்ச்சியாளர்களும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காங்கிரஸிடம் இருந்து சீட்டு கிடைக்காததால், பல தலைவர்கள் அக்கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கினர். சிலர் பாஜக மற்றும் பிற கட்சிகளின் சீட்டுகளிலும் போட்டியிட்டனர். இந்த கிளர்ச்சியாளர்கள் காங்கிரஸையும் வீழ்த்தியுள்ளனர். ஆனால் இதற்கு எதிர்மறையாக பாஜக கட்சியில் போர்க்கொடி தூக்கிய ஒவ்வொரு கிளர்ச்சியாளரையும் சமாதானப்படுத்தும் பொறுப்பை பெரிய தலைவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது மற்றும் அவர்களை சமாதானப்படுத்த முடிந்தவரை முயற்சித்தது. பல கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டனர் மற்றும் பாஜக இதனால் பயனடைந்தது.
மேலும் படிக்க - முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ