மாநில சட்டசபையில் CAA-க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றும் மேற்கு வங்கம்!

கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு CAA க்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வரும் மேற்கு வங்காளம்!!

Last Updated : Jan 27, 2020, 11:52 AM IST
மாநில சட்டசபையில் CAA-க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றும் மேற்கு வங்கம்!  title=

கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு CAA க்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வரும் மேற்கு வங்காளம்!!

டெல்லி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை மாநில சட்டசபையில் திங்கள்கிழமை (ஜனவரி 27) தாக்கல் செய்ய உள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி யுள்ளது. 

"மேற்கு வங்க சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வு ஜனவரி 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கூட்டக்தில் CAA-க்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதிக்கபட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானத்தை ஆதரிக்க அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி முன்பு ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இந்தத் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றிய மூன்று மாநிலங்களாக பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளது.

கேரளா ஒரு படி மேலே சென்று, அண்மையில் CAA-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது அரசியலமைப்பின் 14, 21, மற்றும் 25 வது பிரிவை மீறும் வகையில் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவு (NRC) ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் பாரிய எதிர்ப்புக்கள் வெடித்த வண்ணம் உள்ளது.

நாடு தழுவிய NRC-க்கு முன்னோடியாகக் கருதப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) பணிகளை கேரளா மற்றும் வங்காளமும் நிறுத்தி வைத்துள்ளன, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பயிற்சிக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 

 

Trending News