Weather Update: இந்த மாநிலங்களில் வெப்ப அலை குறையும்; இங்கு மழை பெய்யும் IMD ALERT

Today Weather Update: சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், சற்று நிம்மதி கிடைக்கும் வகையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 7, 2024, 11:04 AM IST
Weather Update: இந்த மாநிலங்களில் வெப்ப அலை குறையும்; இங்கு மழை பெய்யும் IMD ALERT  title=

India Meteorological Department Alert: இன்று வானிலை: நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருதும்பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.  சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பால் சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இன்று (மே 7) முதல் கிழக்கு இந்தியா மற்றும் தென் தீபகற்ப இந்தியாவில் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ்நாடு வானிலை அறிக்கை

அதேபோலே தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது மற்றும் நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்.. வெளியே செல்வதை தவிர்க்கவும் -IMD எச்சரிக்கை

சில மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் 

வட இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெப்பநிலை குறைந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கடும் வெப்பத்தில் இருந்து சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. சில மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் வெப்பம்

ஆனால் ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் கடுமையான வெப்பத்தின் தாக்கம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது 37 முதல் 42 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்த 5 நாட்களில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிய பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்.

பீகார் மற்றும் ஜார்க்கண்ட் வானிலை அறிக்கை 

ஜார்க்கண்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ததால், வானிலை மிகவும் இனிமையானதாக மாறியது. ராஞ்சி உட்பட பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. பீகாரில் பல மாவட்டங்களில் மே 11 வரை மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இன்று வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் -IMD

அடுத்த ஏழு நாட்களில், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று முதல் மே 10 ஆம் தேதி வரை தொடரும் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் கங்கை மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், ஒடிசாவில் மே 7 முதல் மே 9 வரை இதே வானிலை நிலவும் என இந்திய வானிலை மையம் (India Meteorological Department) அறிவித்துள்ளது.'

மேலும் படிக்க - வானிலை தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? நீங்களும் நிபுணராகலாம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News