ஹோலிகா தகனம் (Holika Dahan) என்பது ஹோலிப் பண்டிகைக்கு முதல் நாள் மாலை அதாவது இன்று மாலை கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
ஹோலிக்கு முதல் நாள் மாலையில் சூரிய மறைவின்போது அல்லது மறைவுக்குப்பின் தயார்செய்து வைக்கப்பட்டிருக்கும் சிதையில் தீ மூட்டப்படுகிறது. ஹோலிகா தகனத்திற்கு அடுத்த நாள் வண்ணத் திருவிழாவான ஹோலி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இன்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். அதன் காணொளி இணைக்கப்பட்டு உள்ளது
காணொளி:-
#WATCH: BSF Jawans celebrate #Holi at International Border in Jammu pic.twitter.com/UYC0jwH7CV
— ANI (@ANI) March 1, 2018
இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையே எல்லைப் பாதுகாப்புப் படை(BSF) ஆகும். இது மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை, 1 டிசம்பர் 1965-ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.