ரான்சம்வேர் வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை தாக்கலாம் - சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை

Last Updated : May 16, 2017, 12:35 PM IST
ரான்சம்வேர் வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை தாக்கலாம் - சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை title=

ரான்சம்வேர் மற்றும் வன்னகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் தாக்கலாம் என ரிசர்வ் வங்கிக்கு சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
 

இந்திய வங்கி செக்டார்களில் அடுத்தக்கட்ட தாக்குதலானது இருக்கலாம் என சைபர் கிரைம் நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள். 

இரண்டு மணி நேரங்களில் நம்முடைய வங்கிகள் பாதிக்கப்படலாம் என நினைக்கிறோம். அனைத்து வங்கிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளோம். நம்முடைய நாட்டில் செயல்படும் ஏடிஎம்களில் பயன்படுத்தப்படும் விண்டோஸ்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளது என சைபர் பாதுகாப்பு நிபுணர் குழு கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. 

ரான்சம்வேர் மற்றும் வன்னகிரை வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் நிலைகுலைந்துள்ளது. மேலும் இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு உள்ளது.

ரான்சம்வேர் மற்றும் வன்னகிரை வைரஸின் பாதிப்பு வரும் நாட்களில் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

 

Trending News