கேரளா மாநிலம் இடுக்கி, மாங்குளம் பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்துள்ளனர். அப்பகுதி பொதுமக்களின் வீடுகளில் வளர்த்து வரும் கால்நடைகளையும் தினசரி புலி தாக்கி கொன்று வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட வனத்துறையிடம் முறையிட்டு புலி பிடிப்பதற்கான கூண்டுகளும் அமைக்கப்பட்டன, எனினும் புலி அதில் சிக்காமல் இருந்த நிலையில், அம்பதாம்பதி மலையோர பகுதியை சார்ந்த கோபாலன் என்ற கூலி தொழிலாளி காட்டு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது. இவரை புலி திடீரென இவரை தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த கோபாலனை மீண்டும் புலி தாக்க வந்தபோது உயிரை காப்பாற்றி கொள்ள கையில் இருந்த கத்தியால் புலியை வெட்டியுள்ளார்.இதில் புலியின் முகத்தில் வெட்டப்பட்டுள்ளது, காயமடைந்ததும் புலியை கோபாலனை விட்டுவிட்டு சிறுது தூரம் சென்றதும் கீழே விழுந்து பலியாகியது.
இதைத் தொடர்ந்து பலத்த காயமடைந்து கிடந்த கோபாலனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: இது பாம்பு தாம்மா! இப்படி பயமில்லாம போறியே? காலைச் சுற்றிய பாம்பு வீடியோ வைரல்
மேலும் படிக்க: ராட்சத சிலந்திகளுடன் அசால்டாய் விளையாடும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ