புதுடில்லி: அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நாட்டின் பலம் அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குறித்து தினமும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. அதேபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் குரல் ஓங்கி ஒலிக்கும் வேளையில், உ.பி. மாநிலத்தில் மாயாவதியின் குரல் மீண்டும் நான்கு பக்கங்களிலும் கேட்க துவங்கியுள்ளன.
இவர்களின் மத்தியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பேச்சு மற்றும் அவரது புடவையின் தோற்றம் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. காட்டன் சேலையோ அல்லது பச்சை நிற சேலையோ அல்லது கைத்தறி சேலையோ பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கும் சேலையின் வண்ணத் தேர்வு மிகவும் நன்றாக இருக்கிறது. பிரியங்கா காந்திக்கு முன்பு, தென்னிந்தியாவின் வலுவான தலைவர்களில் ஒருவரான செல்வி ஜெயலலிதா பெரும்பாலும் பச்சை புடவைகளில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது அதிக அளவில் புடவைகளில் மட்டுமே காணப்படுகிறார். தேர்தல் பேரணியில் பிரியங்கா பேசும் போது, அவரின் புடவைத் தேர்வு மிகவும் எளிமையானதாகவும், அதேவேளையில் கம்பீரமானதாகவும் காணப்படுகிறது.
புடவை வடிவமைப்பு அவற்றின் நிறம் வரை பிரியங்காவின் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது. பிரியங்கா காந்தியை பார்க்கும் போது அவரது பாட்டி இந்திரா காந்தியை நினைவுப்படுத்துகிறது.
கங்கை யாத்ராவின் கடைசி நாட்களில் பிரியங்கா ஒரு பச்சை புடவையில் காணப்பட்டார். பிரியங்காவின் இந்த தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. அந்த புடவையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. "இரும்பு லேடி" என அறியப்படும் தமிழகத்தின் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா அணியும் பச்சை கலர் புடவை போல பிரியங்காவும் அணிந்து வருகிறார் என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
பிரியங்காவின் சேலை மக்களிடையே புகழ் பெற்று வருகிறது. சமூக ஊடகங்களிலும் பிரியங்காவின் சேலைக் குறித்து புகழ்ந்து வருகின்றனர். அவரின் சேலை வைரலாகி வருகிறார்.