Video: நிலச்சரிவால் சரிந்துவிழும் பாறைகள் - உத்தரகாண்டில் பக்தர்கள் பாதிப்பு

உத்தரகாண்டில் தவாகட் - லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மலையின் பாறைகள் உடைந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Sep 24, 2022, 04:14 PM IST
  • ஆதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது.
  • உத்தரகாண்டில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
  • தலைநகர் டேராடூனின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிப்பு.
Video: நிலச்சரிவால் சரிந்துவிழும் பாறைகள் - உத்தரகாண்டில் பக்தர்கள் பாதிப்பு title=

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழை காலங்களில், உத்தரகாண்டில் அடிக்கடி நிலச்சரிவு, மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படும். மேலும் , உத்தரகாண்டில் 50-க்கும் மேற்பட்ட புனித தலங்கள் இருக்கிறது. இதனால், அங்குள்ள புனித தலங்களுக்கு பக்தர்கள் யாத்திரையாக செல்வார்கள்.

இந்நிலையில், உத்தரகாண்டில் நேற்று பெய்த கனமழை காரணத்தால், மலையில் இருந்த பாறைகளின் பெரும் பகுதிகள் உடைந்து சரிந்ததில், ஆதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்லும் முக்கிய சாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் உள்ளூர் மக்களுடன் குறைந்தது 40 பக்தர்களும், தவாகாட் பகுதிக்கு அருகே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை, மிக கனமழைக்கு பெய்யும் என கூறப்பட்டு, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | TN Weather Forecast: இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், தவாகத் - லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மலையின் பாறைகள் உடைந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால், ஆதி கைலாஷ் யாத்திரைக்கு செல்லும் முக்கிய பாதைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, பல்வேறு நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. ஹெல்குகாட் மற்றும் ஸ்வரிகாட் அருகே மலைகளில் இருந்து விழுந்த பாறைகள் மற்றும் கற்பாறைகளால்  ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், தலைநகர் டேராடூனில் உள்ள விகாஸ்நகர்-கல்சி-பர்கோட் தேசிய நெடுஞ்சாலையும் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது என மாநில அவசரகால செயல்பாட்டு மையம் (SEOC) தெரிவித்துள்ளது. ராடூனில் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திரபானி சோய்லா, சிம்லா பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வரமல்ல ... சாபம்... ரூ 25 கோடி லாட்டரி வென்ற நபரின் புலம்பல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News