பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, அவருக்கு ஒரு பெண்ணுடன் கட்டாய திருமணம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பக்கத்து கிராமத்தில் இருப்பவர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி முதலில் அவரை அழத்ததாகவும், பின்னர் அவர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
தெக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிதௌலி கிராமத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரின் தந்தை சுபோத் குமார் ஜா, மூன்று பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
கால்நடை மருத்துவரான தனது மகன் சத்யம் குமாரை ஹசன்பூர் கிராமத்தில் வசிக்கும் விஜய் சிங் அழைத்ததாக அவர் கூறினார். பின்னர் விஜய் சத்யத்தை கடத்தி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். பொலிசார் பாதிக்கப்பட்டவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் இந்த வழக்கில் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
Bihar | A veterinarian was abducted and forcibly married in Begusarai
"He was called around 12pm to check on a sick animal, after which 3 people kidnapped him. Everyone in the house was worried after which we went to the police.” said a relative of the victim (14.06) pic.twitter.com/OYA1lQWoBi
— ANI (@ANI) June 15, 2022
வீடியோ வெளியானது
இதற்கிடையில், சத்யம் ஒரு கோவிலில் மணமகன் தோற்றத்தில் ஒரு பெண்ணுடன் திருமண சடங்குகளை செய்யும் வீடியோ ஒன்று இப்போது வெளிவந்துள்ளது. வீடியோவில், மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அருகில் சத்யம் இருப்பதைக் காண முடிகின்றது. ஒரு முதியவர் மந்திரங்களை உச்சரிப்பதையும், தம்பதிகள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் காணலாம். சத்யம், பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ
இருப்பினும், சத்யம் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டாரா அல்லது அவரது விருப்பத்தின்படி அவர் திருமணம் செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டாலும், இன்னும் இது குறித்து யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகவில்லை.
பாதிக்கப்பட்ட நபருடன் குடும்ப உறுப்பினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வு தொடங்கப்பட்டது
பீகார் மாநிலம் பெகுசராயில், 1970ல் பகடுவா சடங்கு துவங்கியது என்றும், பின்னர் கட்டாய திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்டன என்றும் பெகுசராய் எஸ்.பி., யோகேந்திர குமார் கூறினார். கால்நடை டாக்டர் ஒருவர், கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக அவருக்கு திருமணம் நடந்ததால அந்த நபரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுவாக பகடுவா விழா என்று அழைக்கப்படும் கட்டாயத் திருமணங்கள் பீகாரின் பல பகுதிகளில் பரவலாக உள்ளன. பெரும்பாலும், தகுதியான இளங்கலை பட்டதாரிகள் கடத்திச் செல்லப்பட்டு, வரதட்சணை கொடுக்க முடியாத குடும்பப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். எனினும் இதுகுறித்து பல புகார்கள் அளிக்கப்பட்டு இவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள இந்த கால்நடை மருத்துவரின் கட்டாய திருமண வீடியோவால் மீண்டும் இது குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | இது தேவையா! மணமகளை உதைத்த மணமகன் -Watch
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR