வெளுத்து வாங்கிய மழை: வெள்ளத்தில் தத்தளித்த பேருந்து!

டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரெங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கன மழையால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Last Updated : Jul 26, 2018, 10:02 AM IST
வெளுத்து வாங்கிய மழை: வெள்ளத்தில் தத்தளித்த பேருந்து! title=

டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரெங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கன மழையால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் டெல்லியில் உள்ள மெயின் புரி, சைஃபை மற்றும் ஆக்ராவை இணைக்கும் பாலத்தில் மழை வெள்ள நீர் சூழ்ந்தது. இன்று அந்த பாலம் வழியாக சென்ற பேருந்து அதில் மூழ்கித் தத்தளித்தது.

இதையடுத்து, அந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பேருந்தில் பயணிகளும் பயணித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் சமயோசிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் தத்தளித்த பேருந்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

Trending News