சுற்றுலாதலமான நைனிடால் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. வனப்பகுதிகள் அதிகம் கொண்ட நைனிடால் மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. சுமார் 3000 ஹெக்டேர் நிலங்கள் தீயினால் நாசமடைந்துள்ளன. தீயயை அணைக்க இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் எம்ஐ-17 வகை சார்ந்தது என்பது குறிப்பிட தக்ககது. இதுவரை 6பேரை உயிரிழந்துவிட்டனர். இதற்கு காரணமா 4பேரை கைது செய்து விசாரித்து வருகின்றன.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் தீ பரவக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அரியவகை மூலிகைச் செடிகளும் மற்றும் விலையுயர்ந்த மரங்களும் எரிந்து சாம்பலாய்ன.
தீயை அணைப்பதற்காக கிட்டதட்ட 6ஆயிரம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் தீயயை அணைப்பது சிரமமாக இருப்பதால் பகலில் பணிகளை தீவிர படித்தியுள்ளனர். இது வரை மாநில அரசுக்கு ரூ.5 கோடிக்கு மேலாக நிதியுதவி அளிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்படுகின்றன. செயற்கைகோள்கள் மூலமும் கண்காணிக்க படுவதால் தீயை கூடிய சிக்கிரம் கடுப்பாட்டுகள் கொண்டு வந்துருவோம் என்றும், மேலும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்து கொடுக்க படும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
மேலும் மக்களவையில் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உத்தரகண்ட் தீ விபத்து பற்றிய முழு அறிக்கை வேண்டும் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீட்பு படையினர் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என கூறினர்.