உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீடு செய்திருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மருத்துவக் காப்பீடு பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள், இதில் நோயாளியை பணத்தை க்ளைம் செய்வதற்கு, குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதை விட குறைவாக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவ காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்துவிடும். ஆனால், நுகர்வோர் மன்றத்தின் உத்தரவில், மருத்துவக் காப்பீடு பெறுபவர் 24 மணி நேரத்திற்குள் க்ளெய்ம் எடுக்க உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் தனது உத்தரவில் என்ன கூறியுள்ளது என்பதை பார்ப்போம்-
உண்மையில், வதோதராவில் உள்ள ரமேஷ்சந்திர ஜோஷி 2017 ஆம் ஆண்டு நுகர்வோர் மன்றத்தில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்திருந்தார். ஜோஷி தனது மனைவிக்கு 2016 இல் டெர்மடோமயோசிடிஸ் இருப்பதாகவும், அகமதாபாத்தில் உள்ள லைஃப்கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டரில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார். ஜோஷியின் மனைவி சிகிச்சை முடிந்து மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்குப் பிறகு ஜோஷி நிறுவனத்திடம் ரூ.44,468 பில் செலுத்துமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜோஷியின் கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. இதை எதிர்த்து ஜோஷி நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் Clause 3.15ஐக் காரணம் காட்டி ஜோஷியின் விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. மேலும் 24 மணி நேரமும் நோயாளி தொடர்ந்து அனுமதிக்கப்படவில்லை என்பது நிறுவனத்தின் வாதமாக இருந்தது.
இதையடுத்து, மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிராக ஜோஷி நுகர்வோர் மன்றத்தை அணுகினார். மன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தார். மேலும் கடந்த நவம்பர் 24 அன்று மாலை 5.38 மணிக்கு தனது மனைவி அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதேசமயம் நவம்பர் 25, 2016 அன்று மாலை 6.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தீர்ப்பு வங்கிய மன்றம், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதற்கு அவர்கள் முழு தகுதி உடையார் என்று தெரிவித்தது. மேலும் நவீன யுகத்தில், புதிய முறைகள் மற்றும் மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன, அத்தகைய சூழ்நிலையில், மருத்துவர்கள் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கின்றனர் என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது.