மாசுவை கட்டுப்படுத்த டெல்லியை பின்தொடரும் உபி!

மாசுவை கட்டுப்படுத்த தண்ணீர் தெளித்து தூய்மை படுத்தும் பணி துவங்கியது!

Last Updated : Nov 17, 2017, 11:17 AM IST
மாசுவை கட்டுப்படுத்த டெல்லியை பின்தொடரும் உபி! title=

டெல்லியை போன்றே காற்று மாசுபாடு காரணமாக உபி-யும், மிகவும் மோசமான மாசுபாட்டு நிலையை அடைந்துள்ளது. உபி அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.

வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் மற்றும் காசு மாறுபட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இந்நிலையில் உபி-யில் மாசுவினை குறைக்கும் நடவடிக்கையாக லக்னோவில் உள்ள ராஜ்பவன் அருகாமை பகுதிகளில் (மால் அவென்யூ, விக்ரமாதித்யா மார்க், காளிதாஸ் மார்க், தில்குஷா) தண்ணீர் தெளித்து தூய்மை படுத்தும் பணி நடைப்பெற்று வருகின்றது.

முன்னதாக டெல்லியில் மாசுவினை குறைக்கும் நடவடிக்கையாக மரங்களின் மீது தண்ணீர் தெளித்து தூய்மை படுத்தும் பணி நடைப்பெற்று குறிப்பிடத்தக்கது!

Trending News