உக்ரைன் மீது 65 நாட்களாக ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை கண்டித்து அந்நாட்டின் மீது பல்வேரு தடைகளை விதித்து வருகின்றன. மேலும் ரஷியா போரை கைவிட வேண்டும் எனவும் ஐ.நா சபை வலியுறுத்தி வருகிறது.
இந்த போரின் தொடக்கத்தில் வெளிநாட்டு மாணவர்களை நாடு திரும்புமாறு உக்ரைன் அரசு தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டனர்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. மத்திய அரசு மாணவர்களை உக்ரைனை ஒத்த பாடத் திட்டங்களை கொண்ட போலாந்து, ஹங்கேரிக்கு சென்று பட்டப்படிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொண்டது.
மேலும் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர தேர்வுகள் எழுத வேண்டும் என்றும், பயிற்சி மருத்துவர்கள் இங்கு தங்களின் பயிற்சியைத் தொடரலாம் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போருக்கு முன்பாக உக்ரைனில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 422 மாணவர்கள் மருத்துவம் படித்து வந்தனர். அதில் 409 பேர் எம்பிபிஎஸ் படிப்பையும், மூன்று பேர் பல் மருத்துவப் படிப்பையும், ஒருவர் கால்நடை மருத்துவப் படிப்பையும் படித்து வந்தனர்.
மேலும் படிக்க | நீட் தேர்வு விலக்கு மசோதாவா.? கை விரிக்கும் மத்திய அரசு..!
உக்ரைன்- ரஷியா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் மேற்கு வங்கத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,
"மேற்கு வங்கத்தில் ஒட்டு மொத்தமாக 422 மாணவர்கள் உக்ரைனில் இருந்து மாநிலத்திற்கு திரும்பினர். அவர்களை வெவ்வேறு கல்லூரிகளில் படிப்பை தொடர அனுமதிக்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
ஆனால் அவர்களுக்கு உதவ முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மேலும், மாணவர்களை போலாந்துக்கும், ஹங்கேரிக்கும் அனுப்பி படிப்பை தொடர மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால் அவ்வளவு பணத்தை செலவு செய்து படிப்பை தொடருவது பலருக்கு சாத்தியமில்லாத ஒன்று.
உக்ரைனில் இருந்து திரும்பிய 422 மாணவர்களில் 409 பேர் எம்பிபிஎஸ் படிப்பையும், மூன்று பேர் பல் மருத்துவப் படிப்பையும், ஒருவர் கால்நடை மருத்துவப் படிப்பையும் தொடர்ந்து படிக்கவுள்ளனர்.
இவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதிய சேர்க்கைக்கான மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்படுவதற்கான உடனடி கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த மாணவர்களிடம் கட்டத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க | ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் தெரியுமா.? மத்திய அரசை அறிவுறுத்திய கனிமொழி.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR