இந்தியாவுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்., எரிவாயு பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு விநியோகம் செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சவுதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு பயன் அளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் சவுதி அரேபியாவின் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பல லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் எரிந்து நாசமானது.
இந்த சம்பவத்தால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் LPG எனப்படும் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
This gesture of UAE ADNOC provides further momentum to our comprehensive strategic partnership. We look forward to collaborate and work together to strengthen our hydrocarbon engagements with an important partner like the UAE.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 24, 2019
Thank UAE Minister of State and Group CEO @AdnocGroup H.E. Dr. Sultan Ahmed Al Jaber for supply of two additional LPG cargoes on an urgent basis to meet the incremental LPG demand in the upcoming festive season. The LPG cargoes will reach India over the next two weeks.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 24, 2019
இந்தியாவை பொறுத்தவரையில் மாதந்தோறும் 2 லட்சம் டன் சமையல் எரிவாயுவை சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோகம் விரைவில் சீர்படுத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் சமையல் எரிவாயுவின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். அதனால் சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்., இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில்., "இந்தியாவின் அவசர தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக இரண்டு சரக்கு கப்பலில் சமையல் எரிவாயுவை அனுப்பி வைத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரும் ஆட்னாக் குழுமத்தின் தலைவருமான டாக்டர் சுல்தான் அகமது அல் ஜாபருக்கு எனது நன்றிகள்." என குறிப்பிட்டுள்ளது.