வீடியோ அழைப்பில் விசாரணைக்கு ஆஜராக தயார்: Twitter India தலைவர்

குறிப்பிட்ட போலி செய்திகள் அல்லது வன்முறையை தூண்டும் செய்திகள் போன்றவற்றுக்கு, சர்ச்சைக்குரிய பதிவை செய்த சம்பந்தப்பட்ட நபருடன் கூடவே,  ட்விட்டர் (Twitter) மீதும் வழக்கு தொடரலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2021, 04:47 PM IST
  • சர்ச்சைக்குரிய பதிவை செய்த சம்பந்தப்பட்ட நபருடன் கூடவே, ட்விட்டர் (Twitter) மீதும் வழக்கு தொடரலாம்.
  • உத்திரபிரதேச காவல்துறை, ட்விட்டரின் (Twitter) இந்தியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது
  • வீடியோவை பரப்பியவர்களின் “ட்விட்டர் கணக்கு விவரங்களை” அனுப்ப வேண்டும் என கூறி காஜியாபாத் போலீஸ் ட்விட்டருக்கு இரண்டாவது நோட்டீஸ்.
வீடியோ அழைப்பில் விசாரணைக்கு ஆஜராக தயார்: Twitter India தலைவர்  title=

போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில், புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும்  இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் (Twitter) தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதைஅடுத்து  ட்விட்டர் நிறுவனம் சட்ட பாதுகாப்பை இழந்தது. 

இதனால், இனி ட்விட்டரில் பதிவிடப்படும் போலி செய்திகள், வன்முறையை தூண்டும் பதிவுகள்  இந்திய இறையாண்மைக்கு எதிரான பதிவுகள், ஆகியவற்றுக்கு ட்விட்டர் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட போலி செய்திகள் அல்லது வன்முறையை தூண்டும் செய்திகள் போன்றவற்றுக்கு, சர்ச்சைக்குரிய பதிவை செய்த சம்பந்தப்பட்ட நபருடன் கூடவே,  ட்விட்டர் (Twitter) மீதும் வழக்கு தொடரலாம். 

ALSO READ | உத்திர பிராதேச போலீஸ் ட்விட்டருக்கு நோட்டீஸ்; காவல் நிலையத்தில் ஆஜாராக உத்தரவு

இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் காசியாபாத்தில் இஸ்லாமிய நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் "வகுப்புவாத வன்முறையை தூண்டும் நோக்கில்"  பொய்யான தகவல்களை பரப்பி பதற்றம் ஏற்படுத்த முயன்றதாக, உத்தரபிரதேச காவல்துறை, ட்விட்டரின் (Twitter) இந்தியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

அதில், இந்தியாவில் ட்விட்டரின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி,  ஏழு நாட்களுக்குள் டெல்லிக்கு (Delhi) அருகிலுள்ள லோனி பார்டரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஆஜராகி,  தனது அறிக்கையை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ், வீடியோ கான்பரென்சிங் மூலம் விசாரணையில் பங்கேற்க தயார் என உத்திர பிரதேச போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.  இருப்பினும், காவல்துறை அவர்கள் பதிலில் திருப்தி அடையவில்லை என்றும் மீண்டும்  நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வீடியோவை பரப்பியவர்களின்  “ட்விட்டர் கணக்கு விவரங்களை”  அனுப்ப வேண்டும் என கூறி காஜியாபாத் போலீஸ் ட்விட்டருக்கு இரண்டாவது நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

வைரலான வீடியோவில் காணப்பட்ட, சூஃபி அப்துல் சமத்,  என்பவரது தாடி வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டதாகவும், அவர் "வந்தே மாதரம்" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில்,  தாயத்து விற்பனை தொடர்பான பிரச்சனை என்றும், தாயத்துக்களை விற்று ஏமாற்றியதற்காக, அவரிடம் தாயத்து வாங்கிய இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு சமூகங்களை சேர்ந்த ஆறு நபர்கள் தாக்கியதும் தெரிய வந்தது.

மேலும், தவறான பதிவின் மூலம் இனவாத வன்முறையை தூண்ட முயன்ற, சுமார் 8 பேருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டது. கலவரத்தை தூண்டுதல், மத உணர்வுகளை தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | Ghaziabad தாக்குதல் வழக்கில் ட்விட்டர் & பத்திரிகையாளர்கள் மீது FIR

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News