ஏப்ரல் 1 முதல் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ராஜதானி, சதாப்தியில் பயணிக்கலாம்

விரைவு ரயிலில் முன்பதிவு செய்தும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போனால் அதே வழியில் செல்லும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயிலில் பயணிக்கும் திட்டம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Last Updated : Mar 22, 2017, 12:27 PM IST
ஏப்ரல் 1 முதல் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ராஜதானி, சதாப்தியில் பயணிக்கலாம் title=

புதுடெல்லி: விரைவு ரயிலில் முன்பதிவு செய்தும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போனால் அதே வழியில் செல்லும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயிலில் பயணிக்கும் திட்டம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

ரயிலில் பயணம் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயிலில் இடமிருந்தால், அங்கு தங்களது டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டம் முதற்கட்டமாக 6 செக்டாரில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.

இந்த திட்டம் தொடர்பாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில்:-

டிக்கெட் ரத்து மற்றும் சேவை கிடைக்காததற்காக வருடந்தோறும் ரயில்வே ரூ. 3,500 கோடி அளவுக்கு பணம் திருப்பி தருகிறது. புதுதிட்டம் மூலம், காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தன.

Trending News