குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதித்து திரிணாமுல் MP வழக்கு...

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் MP மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 

Last Updated : Dec 13, 2019, 01:59 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதித்து திரிணாமுல் MP வழக்கு... title=

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் MP மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 

எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவின் பெஞ்ச் இந்த விவகாரம் குறித்து முன்கூட்டியே விசாரணை நடத்த மறுத்துவிட்டது. மேலும், பட்டியலிடுவதற்கான பதிவில் பதிவுசெய்ய பதிவாளர் முன் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுமாறு மொய்த்ராவின் ஆலோசகரை நீதிமன்றம் கேட்டுள்ளது.
 
உண்மையில், இந்த மசோதாவை வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார், அதனுடன் இப்போது இந்த மசோதா சட்டமாகிவிட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் முன் அவசர விசாரணைக்கு மொய்த்ரா-வின் வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் செலுபடிக்கு எதிரான மனுவை முன்வைத்தார். 

மேலும் இந்த மனுவை இன்று அல்லது டிசம்பர் 16-ம் தேதி விசாரிக்குமாறு மொய்த்ராவின் வழக்கறிஞர் பெஞ்சை வலியுறுத்தியுள்ளார். ஆனால் உச்சநீதிமன்ற அமர்வு இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகுமாறு மொய்த்ரா-வின் தரப்பினை கேட்டுள்ளது. 

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டம், மக்களவையில் திங்கள்கிழமை, ராஜ்யசபாவில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது, இதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை ஜனாதிபதியால் கையெழுத்தானது.

குடியுரிமைச் சட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கில் மக்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

ஏற்கனவே சில நாடுகளில் இருந்து இந்தியாவில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை குடியுரிமைச் சட்டம் விரைவாக பரிசீலிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனது குடிமகனைக் கணக்கிடுவதற்கும் சரிபார்ப்பதற்கும் உரிமை உண்டு என்றும், பல்வேறு கொள்கைகளின் மூலம் தனிச்சிறப்பைப் பயன்படுத்துவதாகவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Trending News