திருமலையில் சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழன் அன்று அலிபிரி - திருமலை நடைபாதையில் இருந்து திருமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த 5 வயது குழந்தை கௌஷிக் சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.
ஆந்திராவின் அதோனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றனர். அவர்கள் திருப்பதியில் (அலிபிரி) திருமலா கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர். இடையில் 7வது மைலில் அனுமன் சிலை அருகே, சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன் பிறகு அவர் மீண்டும் நடக்கத் தொடங்கியவுடன் அவருடன் இருந்த சிறுவன் கௌசிக்கை திடீரென சிறுத்தை ஒன்று தாக்கியது. மேலும், அந்த சிறுத்தை சேஷாசலம் வனப்பகுதிக்குள் சிறுவனை இழுத்துச் செல்ல முயன்றது.
சிறுத்தை சிறுவனை புதருக்குள் இழுத்துச் சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூச்சலிடத் தொடங்கி, சிறுத்தையையும் விரட்ட முற்பட்டனர். இதனால், சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு தப்பிச்சென்றது.
ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவன், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு (TTD) அழைத்துச்செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சிறுவன் அழைத்துச்செல்லப்பட்ட போது....
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய TTD நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மரெட்டி, ‘திருமலை நடைபாதையில் ஏழாவது மைலில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோவில் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. நடைபாதை திருமலை கோவிலுக்கு செல்கிறது. துரதிர்ஷ்டவசமாக சிறுவன் விலங்கால் தாக்கப்பட்டான். நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். பாதுகாப்பு ஊழியர்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறுவனை காப்பாற்றியதை நான் பாராட்டுகிறேன். சிறுவன் பாதுகாப்பாக இருக்கிறார். அவரை சிறந்த சிகிச்சை நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.’ என்று கூறினார்.
மேலும் படிக்க | வால்பாறை அருகே சாலையில் உலா வரும் சிறுத்தைகள்
மேலும் படிக்க | சிசிடிவியில் சிக்கிய சிறுத்தை! பொதுமக்கள் அச்சம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ