கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே கடலோர காவல் படை ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர். கடலோர காவல்படை பயிற்சியில் விமானம் புறப்படும் போது இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டர் ரன்வேயிலிருந்து . இச்சம்பவம் 12:30 மணியளவில் நேரிட்டது. இந்திய கடற்படை சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இந்த சம்பவம் கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே நடந்துள்ளது. கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கடலோர பாதுகாப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பயிற்சியின்போது இந்த விபத்து நடந்துள்ளது.
ஹெலிகாப்டர் தரையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்தது. எனினும், விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்து அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் படிக்க | Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' - கெத்தாக சொன்ன ராகுல் காந்தி
"CG 855, ALH Mk III, கொச்சியை தளமாகக் கொண்டது, விமானத்தில் கட்டுப்பாட்டு கம்பிகளைப் பொருத்திய பிறகு, விமானச் சோதனைக்காக சுமார் 1225 மணி நேரத்தில் கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது. விமானச் சோதனைகளுக்கு முன்னதாக, HAL மற்றும் ICG குழு விரிவான மற்றும் திருப்திகரமாக சோதனைகளை செய்திருந்தது. என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புறப்பட்ட உடனேயே, CG 855 தரையிலிருந்து சுமார் 30-40 அடி உயரத்தில் இருந்தபோது, சுழற்சிக் கட்டுப்பாடுகள் (விமானத்தின் நீளமான மற்றும் பக்கவாட்டு இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்) வேலை செய்யவில்லை. இதை அடுத்தும் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையைத் தடுப்பதைத் தவிர்க்க, விமானத்தை பிரதான ஓடுபாதையில் இருந்து விலக்கி, குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் விமானி இயக்கினார். அதன்பிறகு, ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரையும் காப்பாற்றும் வகையில் தரையிறக்கத்தை முடிந்தவரை பதுகாப்பானதாக செய்தார். விமானம் இடதுபுறமாகச் சென்று பிரதான ஓடுபாதையின் இடதுபுறத்தில் மோதியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த இந்திய கடலோர காவல்படை உத்தரவிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ