2023 பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என தகவல்!

பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும்.  முதல் பகுதி வழக்கமாக ஜனவரி 30 அல்லது 31 ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2022, 01:56 AM IST
  • மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
  • பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும்.
  • பிரதமர் நரேந்திர மோடி 2020 டிசம்பரில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
2023 பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என தகவல்! title=

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்கான பாராளுமன்றம் கூடும் மார்ச் மாதம் புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் நடைபெறும் என பிரஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி வழக்கமாக ஜனவரி 30 அல்லது 31 ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும்.

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக முதல் பகுதி பிப்ரவரி 8 அல்லது 9-ம் தேதி முடிவடையும். அமர்வின் இரண்டாம் பகுதி வழக்கமாக மே மாத தொடக்கம் வரை தொடரும். இந்த அமர்வின் இரண்டாம் பகுதி தற்போதைய கட்டமைப்பிற்கு அருகில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பார்லிமென்ட் கட்டிடம், சென்ட்ரல் விஸ்டாவின் மறுமேம்பாட்டின் ஒரு பகுதியாகும். பிரதமர் நரேந்திர மோடி 2020 டிசம்பரில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் படிக்க | ஜனவரி 1, 2023: ஜிஎஸ்டி முதல் சிலிண்டர் வரை பல மாற்றங்கள், சாமானியர்களுக்கு சாதகமா? பாதகமா?

டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்படும் புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, நூலகம், பல குழு அறைகள், உணவருந்தும் பகுதிகள் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் இருக்கும்.

மேலும் படிக்க | Heeraben Modi Death : கண்ணீருடன் தோளில் சுமந்த பிரதமர் மோடி... தாயாரின் உடல் தகனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News