கடலோர காவல் படையினர் கேரளாவில் ஓகி புயலால் பாதிக்கப்படவர்களை தேடும் பணியில் தீவிரம் அடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஓகி புயல் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தெற்கு பகுதியில் உள்ள கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. இப்போது, அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயலின் கோரதாண்டவம் மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களில் துவங்கியுள்ளது.
இதையடுத்து, கேரளாவில் மட்டும் 31 மீனவர்கள் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து தற்போது, கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஓகி புயலால் மாயமான மீனவர்களை தேடும் பணியில் தீவிரம் அடைந்து வருகின்றனர்.
Indian Navy search and rescue operation continues for missing fishermen off Kerala coast #CycloneOckhi pic.twitter.com/IxuBZMrds5
— ANI (@ANI) December 6, 2017