டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேற்று இருகுழந்தைகள் பிறந்து உள்ளது. குழந்தை உயிரிழந்துவிட்டது என மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் பிளாஸ்டிக் பையில் வைத்து ஒப்படைத்து உள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு கொண்டு சென்ற போது குழந்தையின் உடல் அசைந்து உள்ளது. குழந்தைகளின் தந்தை பார்த்த போது குழந்தைக்கு உயிர் இருந்ததும், குழந்தை மூச்சு விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் குழந்தையை உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்து உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, குறிப்பிட்ட மருத்துவர் உடனடியாக வேலையைவிட்டு நீக்கப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் தொடர்பில் உள்ளோம், அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
#Delhi Visual of newborn baby who was declared dead by Max Hospital in #Delhi's Shalimar Bagh found to be alive by family later pic.twitter.com/EzaU0Ukb1m
— ANI (@ANI) December 1, 2017
மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜேபி நட்டா பேசுகையில், துரதிஷ்டவசமான சம்பவம் ஆகும், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் டெல்லி அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம் என கூறிஉள்ளார்.