புது டெல்லி: லடாக்கின் (Ladakh) கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா துருப்புக்களுக்கு (Line of Actual Control) இடையே வன்முறை மோதல்கள் நடந்தன. இரு நாடுகளிலும் இழப்பு ஏற்பட்டது, ஆனால் சீனாவின் (China) மோசடி காரணமாக அது தொடங்கியது. இப்போது சீனாவுக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சீனா அதிபர் புகைப்படங்கள் எரிக்கப்படுகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவ பொம்மை மற்றும் சீனப் பொருட்களுக்கும் மக்கள் தீ வைக்கின்றனர்.
உத்தரபிரதேசம், வாரணாசி மற்றும் குஜராத்உட்பட வட மாநிலங்களில் சீனாவுக்கு எதிராக தங்கள் கோபத்தை மக்கள் (Indian People) காட்டினார்கள். எல்லையில் வீரர்கள் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து, அந்நாட்டு அதிபர் ஜி சின்ஃபிங்கின் உருவ பொம்மையை எரிந்தனர். மேலும் சீன பொருட்களை வீதியில் கொட்டி மக்கள் எரித்தனர். மேலும் சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கோஷங்கள் அரங்கேறின. கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு மத்தியில் குஜராத்தில் ஆர்ப்பாட்டம். மக்கள் சமூக தூரத்தை மறந்து ஒன்றுபட்டனர்.
முன்னதாக, கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் திங்கள்கிழமை மாலை ஒரு காலாட்படை பட்டாலியன் கட்டளை அதிகாரி உட்பட 20 இந்திய வீரர்கள் (Indian soldiers) கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் கடந்த 40 நாட்களாக இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
தற்போது இருநாட்டு வீரர்களின் உயர்மட்ட அதிகர்கள் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர்.