குஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலி

Gujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2024, 05:52 PM IST
குஜராத் சாலை விபத்து:  அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலி title=

குஜராத் சாலை விபத்து: இன்று குஜராத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்படுள்ளது. அகமதாபாத்-வதோதரா விரைவுச்சாலையில் நாடியாட் என்ற இடத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் பத்து பேர் பலியாகியுள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்து உள்ளனர். இந்த கார் வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலீசார் அளித்த தகவலின்படி, இந்த விபத்தில் காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பயங்கரமாக காயமடைந்து 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ரோந்து குழுவுடன் இரண்டு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்து காரணமாக விரைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் மற்றும் கார் எப்படி திசை திருப்பப்பட்டது என்பதை அறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த சோக நிகழ்வு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எதிர்கால விபத்துகளைத் தடுக்க முழுமையான விசாரணையின் அவசியத்தையும் எடுத்துரித்து உள்ளது. 

மேலும் படிக்க - திடீரென சாய்ந்து விழுந்த 150 அடி உயர தேர்... பதற வைக்கும் வீடியோ...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News