மெல்போர்ன்-ல் நடைப்பெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி-க்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் ரூ.2 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளார்!
Telangana CM K Chandrashekhar Rao announces cash prize of Rs 2 Crore for Aruna Reddy, first Indian to win an individual medal at #GymnasticsWorldCup in Melbourne, Australia. pic.twitter.com/Ed7991PE9U
— ANI (@ANI) March 4, 2018
கடந்த பிப்., 24 ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைப்பெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் தனிநபர் பதக்கத்தை வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்ட் வீராங்கனை என்ற வரலாற்று பெருமை படைத்தவர் அருணா ரெட்டி.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 22 வயதான ரெட்டி, 13.649 சராசரி புள்ளிகள் பெற்று வெண்கல பதகத்தினை வென்றார்.
இப்போட்டியில், ஸ்லோவானியாவின் டிஜாஸ் க்ச்செல்ஃப் 13.800 புள்ளிகளுடன் தங்கம் தட்டிச் சென்றார். அதே வேலையில் ஆஸ்திரேலியாவின் எமிலி வொய்ட்ஹெட் 13.699 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் பெற்றார்.
இறுதி சுற்றுவரை முன்னேறிய மற்றொரு இந்திய வீரங்கனை பிரணதி நாயக், 13.416 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்தார்.
இச்சம்பவம் குறித்து "உலகக் கோப்பையில் முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை அருணா எனவும், அவரைப் பற்றி நினைக்கையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என ஜிம்னாஸ்டிக்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா-வின் செயலாளர் ஷந்திகுமார் சிங் தெரிவித்து பெருமை பாராட்டினார்.
இந்நிலையில் இன்று அவரை கௌரவிக்கும் வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் ரூ.2 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளார்!