சமையலறையில் இறந்து நிலையில் மாடல் ஜாகி ஜான்; மரணத்திற்கான காரணம் தெரியவில்லை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் பிரபல தொகுப்பாளர் ஜாகி ஜான், அவரது வீட்டில் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரணை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2019, 01:48 PM IST
சமையலறையில் இறந்து நிலையில் மாடல் ஜாகி ஜான்; மரணத்திற்கான காரணம் தெரியவில்லை title=

திருவனந்தபுரம்: தொலைக்காட்சி மூலம் நன்கு அறியப்பட்டவரும் மாடலுமான பிரபல நடிகை ஜாகி ஜான் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டின் சமையலறையில் நேற்று (திங்கள்கிழமை) இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணத்துக்கு காரணம் யார் என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். 

இது சம்பந்தமா காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜாகி ஜான் தனது தாயுடன் கேரளாவின் குர்வாங்கோனத்தில் ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். அவர் அந்த பிளாட்டின் சமையலறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். இப்போது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பேசிய போலீஸ் தரப்பு, "நாங்கள் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். செவ்வாய்க்கிழமை விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடத்தப்படும், அதன் பிறகு கிடைக்கும் விவரங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூர் தகவல்களின்படி, ஜான் தனது தாயுடன் வசித்து வந்தார். ஜாகி இறந்த நேரத்தில், அவரது தாயும் வீட்டில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், மகள் இறந்த செய்தியால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதால், அவரால் போலீசார்  கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க மனரீதியாக தயாராக இல்லை.

அவரது இல்லத்தின் சமையலறையில் ஜான் இறந்து கிடந்த சம்பவத்தை அவரது நண்பர் (பக்கத்து வீட்டுக்காரர்) போலீசாருக்கு தகவல் அளித்தார் என்று கூறப்படுகிறது. ஜாகியின் உடலை அவளது பக்கத்து வீட்டுக்காரர் பார்த்ததாகக் கூறப்படுகிறது 

பேஸ்புக் மற்றும் சமூக செயலில் இருந்த ஜான், மலையாள சேனலில் ரோஸ்போல் என்று அழைக்கப்படும் "ஜாகீஸ் குக்புக்" என்ற சமையல் நிகழ்ச்சிக்காக அறியப்பட்டார். பல ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Trending News