பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து விட்டன. பல சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டன. பல பேரணிகள் நடந்து விட்டன. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிற்பதாகத் தெரியவில்லை. அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் (Crime Against Women) பற்றி வரும் செய்திகள் மனதை பதபதைக்க வைக்கின்றன.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் (Greater Noida) இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கு ஒரு சிறுமி இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஜூலை 23 அன்று கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா காவல் நிலைய பகுதியில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவர் மீதும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
“பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுமார் 14 வயது இருக்கும் என தெரிய வந்துள்ளது. அவர் ஜூலை 23 அன்று தனது வீட்டிலிருந்து சில தெருக்கள் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் பால் விநியோகித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் வீட்டருகில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான தெருவில் இருவர் அப்பெண்ணை வழி மறித்தனர். இருவரின் வயதும் சுமார் 20 இருக்கும் என கூறப்படுகிறது. வலுக்கடாயமாக அப்பெண்ணை அந்த இருவரும் மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்தனர். பின்னர் அப்பெணணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்” என்று ரபுபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் வெள்ளிக்கிழமை காலை காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 –ன் (IPC 376) (கற்பழிப்பு) கீழ், குற்றம் செய்த இருவரின் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் நொய்டாவின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விஷால் பாண்டே தெரிவித்தார்.
ALSO READ: கொடூரத்தின் உச்சக்கட்டம்: பசுமாட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்!!
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாகும் (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை தேடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாண்டே கூறினார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.