டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்பு

Tamil Nadu Farmers Protest in Delhi: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் என பரபரப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 24, 2024, 02:07 PM IST
  • விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்.
  • செல்போன் கோபுரம் மற்றும் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகள்.
  • போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனா்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்பு title=

Jantar Mantar, Delhi: விவசாய விளை பொருள்களுக்கு லாபகராமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தா் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டெல்லியில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனா். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர். 

தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வோம் -மிரட்டிய விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திடீரென பெண்கள் உள்பட சில விவசாயிகள் செல்போன் கோபுரம் மீதும், மரத்தின் மீதும் ஏறி போராட்டம் நடத்தினர். அதில் சிலர் கயிறுடன் ஏறி நின்ற தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள், செல்போன் கோபுரம் மற்றும் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகளை வலுகட்டாயமாக கீழே இறக்கினர்.

மேலும் படிக்க - பாஜக ஆட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை -அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் என்ன?

- விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். 

- விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 

- விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 

- காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 

- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க வேண்டும்.

- மேகதாதுவில் அணை கட்ட கூடாது.

டெல்லி எல்லைப்பகுதியில் பல போராட்டம் செய்யும் விவசாயிகள்

ஏற்கனவே தேசிய தலைநகரம் டெல்லியின் எல்லைப்பகுதியில் பல மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமும் தங்களின் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது கவனம் பெற்றுள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி

தமிழக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் டெல்லியில் போராட்டம் நடத்த 30 ஆம் தேதி வரை அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News