ரபேல் விவாகாரத்தில் தேதி அறிவிக்கப்படாமல் தீர்பினை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Supreme Court reserves verdict on a bunch of petitions demanding a probe into the #RafaleDeal. pic.twitter.com/TVnVgEIwpM
— ANI (@ANI) November 14, 2018
இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வந்த நிலையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் விவகாரம் ரபேல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையினை தாக்கல் செய்தது, ஆனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில்., ரபேல் விமான விலை விவரங்கள் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குதமாறு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று பிற்பகல் இந்திய விமானப்படை அதிகாரிகள் உச்சநீதின்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையின் போது ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை என்றும், அது டசால்ட் நிறுவனத்தின் முடிவு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், ரபேல் விலை தொடர்பான ரகசியங்களை அரசு மறைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார். மேலும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.