கொரோனா நோயாளி வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்ச நீதிமன்றம்

கோவிட் -19 நோயாளி தொடர்பாக, ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனா நோயாளியின் வீட்டிற்கு வெளியே நோட்டீஸ் அல்லது போஸ்டர் ஒட்டக்கூடாது என்று கூறியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 9, 2020, 02:33 PM IST
  • கோவிட் நோயாளிகளின் வீட்டிற்கு வெளியே நோட்டீஸ் ஒட்டக் கூடாது என உத்தரவு
  • பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் மட்டுமே ஒட்டப்பட வேண்டும்
  • நோட்டீஸ் அல்லது போஸ்டர் ஒட்டப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் எந்த அறிவுறுத்தலும் இல்லை
கொரோனா நோயாளி வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்ச நீதிமன்றம் title=

மத்திய அரசின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் கோவிட் 19 நோயாளியின் வீட்டிற்கு வெளியே அறிவிப்பு அல்லது நோட்டீஸ் எதுவும் ஒட்டப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா நோயாளியின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் அல்லது அறிவிப்புகளை ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதுடன், பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என விதிமுறை இருப்பதாகவும் கூறியுள்ளது.

 கொரோனா (Corona) நோயாளியின் வீட்டிற்கு வெளியே அறிவிப்பு அல்லது நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த , உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து, மத்திய அரசு ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இது போன்ற நோட்டீஸ்கள் அல்லது அறிவிப்பை வீட்டிற்உ வெளியே ஒட்டக் கூடாது எனக் உத்தரவிட்டது.

கோவிட் நோயாளியின் வீட்டிற்கு வெளியே அறிவிப்பு அல்லது நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் எந்த விதமான அறிவுறுத்தலும் இல்லை என்று மத்திய அரசு (Central Government) ஏற்கனவே கூறியிருந்தது. 

கொரோனா நோயாளிகளின் வீட்டிற்கு வெளியே அறிவிப்பை ஒட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான கடைசி விசாரணையின் போது, ​​தொற்று ஏற்பட்ட நபர்களின் வீடுகளுக்கு வெளியே சுவரொட்டிகள் ஒட்டப்படும் போது, ​​மற்றவர்கள் அத்தகையவர்களை தீண்டத்தகாதவர்களைப் போல  நடத்துகிறார்கள் என உச்ச நீதிமன்றம் கூறியது. 

உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், மனுதாரர் குஷ் கல்ரா, நோட்டீஸ் ஒட்டுவது என்பது சட்ட பிரிவு 21ன் கீழ், இருவரின் தனியுரிமையை மீறுவதற்கான செயல் என்றும், கோவிட் 19 நோயாளி, கண்ணியத்துடன் வாழ்வதற்கான அவர்களின் உரிமையை மீறுவதாகவும் எனவும் வாதிட்டார். 

ALSO READ | பெட்ரோல் டீசல் விலை ₹100-ஐ எட்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News