மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு....
மலையாளத்தில் ‘மீஷ’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எஸ்.ஹரீஷ் என்பவர் மாத்ருபூமி வார இதழில் எழுதியிருந்தார். இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஹிந்துப் பெண்களையும் பிராமண பூஜாரிகளையும் இகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் பலரும்.
இந்த நாவல், மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்தது. தொடர்ந்து இதனை நாவலாக வெளியிடும் முயற்சியில் அது ஈடுபட்டது. ஆனால், ஹிந்துப் பெண்களின் எதிர்ப்பால் மாத்ருபூமி இதழ் இந்த நாவலை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கியது. பல எதிர்ப்புகளை எதிர்த்து இந்த நாவல் அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இதையடுத்து, இந்நாவலை தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை தீபக் மிஸ்ரா தலைமைலான குழு இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில்தங்களது கற்பனையில் தோன்றுவதை எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத அனுமதிக்க வேண்டும்; எழுத்தாளர்களின் கற்பனை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என யாராலும் கட்டமைத்து கூற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது....
The Supreme Court bench, headed by Chief Justice of India Dipak Misra, dismissed the petition, saying 'the writer's imagination must enjoy freedom.' https://t.co/5uBvau59iH
— ANI (@ANI) September 5, 2018