ஜம்முவில் அத்துமீறித் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் மரணம்!

3-ஜெய்ஷ் இ பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அங்கு பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா என தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated : Feb 11, 2018, 11:17 AM IST
ஜம்முவில் அத்துமீறித் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் மரணம்! title=

ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ முகாமுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காயமடைந்த 3 வீரர்கள் இன்று வீரமரணம் அடைந்தனர். 

இதனையடுத்து வீரர்களின் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஜம்முவில் சுஞ்ச்வான் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமில், நேற்று காலை, பாக்.,கைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி, திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு, இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி தந்தனர். தகவல் அறிந்து, பிற பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும், ராணுவ முகாமுக்கு விரைந்து வந்தனர்.

இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர்களும், பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில், ராணுவ வீரர்கள் இருவர் உயிர் இழந்தனர். ஆறு பெண்கள், குழந்தைகள் உட்பட, ஒன்பது பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காயமடைந்தவர்களை முதல்வர் மெஹபூபா முப்தி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 3 வீரர்கள் இன்று வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ராணுவ வீரர்களின் பதிலடியில் 3 ஜெய்ஷ் இ பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அங்கு பயங்கரவாதிகள் யாரும் பதுங்கியுள்ளனரா என தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, கடும் கண்காணிப்பு பணியல் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Trending News