சுனில் அரோரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்!

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்! 

Last Updated : Nov 27, 2018, 08:22 AM IST
சுனில் அரோரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்!   title=

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்! 

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அன்றைய தினமே சுனில் அரோரா பதவியேற்றுக் கொள்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையர் 65 வயது வரை பதவி வகிக்கலாம் என்பதால், இன்னும் இரண்டரை ஆண்டுகள் சுனில் அரோரா பதவியில் நீடிப்பார்.

சுனில் அரோரா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் ஆகியவை இவரது தலைமையில் நடைபெற உள்ளன. 1980 ஆம் ஆண்டு IAS அதிகாரியான சுனில் அரோரா ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். தேர்தல் ஆணையராக கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்யப்பட்டார். 

 

Trending News