‘இந்தியாவுக்குத் தான் முதலிடம்’: சீனாவிற்கு அதன் இடத்தைக் காட்டிய இலங்கை!!

இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் ஒரு மிக முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் சீராகி வருகின்றன என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 01:10 PM IST
  • எப்போதும் இந்தியாவுக்குத் தான் முன்னுரிமை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
  • இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் ஒரு மிக முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
  • இந்தியா தன்னை நம்பி வரும் நாடுகளுக்கு எப்போதும் உதவ மறுப்பதில்லை.
‘இந்தியாவுக்குத் தான் முதலிடம்’: சீனாவிற்கு அதன் இடத்தைக் காட்டிய இலங்கை!!  title=

இலங்கை அரசாங்கம் (Sri Lankan Government) எப்போதும் இந்தியாவுக்குத் தான் முன்னுரிமை அளிக்கும் என்றும், கொழும்பு ‘முதலில் இந்தியா’ என்ற கொள்கையைப் பின்பற்றும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது. இதனால் இந்த துணைக் கண்டத்தில் இந்தியாவுடன் போட்டி போடும் சீனாவின் திட்டங்கள் பின்வாங்குவதாகத் தெரிகின்றன.  

இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் (Jayanath Colombage) ஒரு மிக முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் சீராகி வருகின்றன என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதனால் பெய்ஜிங்கிற்கு அரசியல் செயலுத்தி ரீதியான மிகப்பெரிய தோல்வி கிடைத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

“அதிபர் கோத்தபய ராஜபக்சே (Gotabaya Rajapaksa) , பாதுகாப்பு செயலுத்தியைப் பொறுத்தவரை, நாங்கள் ‘இந்தியாவிற்கு முன்னுரிமை’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு ஒரு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக நாங்கள் இருக்க முடியாது. அப்படி நாங்கள் இருக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் இந்தியாவால் பல வகைகளில் பயனடைகிறோம். பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இந்தியாதான் எங்கள் முதல் முன்னுரிமை என்று அதிபர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் பொருளாதார செழிப்புக்காக நாங்கள் மற்ற நாடுகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது’ என்று ஜெயநாத் கொலம்பேஜ் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார்.

இலங்கை வெளியுறவு செயலாளர் மேலும் கூறுகையில், ஹம்பந்தோட்டா துறைமுகத்தை (Hambantota Port) 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கு வழங்குவதற்கான முடிவு ஒரு "தவறு" என்று கூறினார். இலங்கையின் அதிகார வட்டங்களிலிருந்து முதல் முறையாக வந்துள்ள இந்த ஒப்புதல் ஒரு மிகப்பெரிய விஷயமாகும்.

ஹம்பாந்தோட்டா துறைமுகம் -  சீனாவின் ஆக்கிரமிப்பு கடன்-பொறி கொள்கைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்:

முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் இந்த சர்ச்சைக்குரிய திட்டம் வந்தது. இது இந்தியா இலங்கை உறவுகள் மோசமடைவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

தனது சாதுர்யமான செயலுத்திகளின் ஒரு பகுதியாக, சீனா (China) இலங்கைக்கு பல பணித்திட்டங்களில் நிதி உதவி செய்தது. இந்த நிதி உதவிகளுக்கான வட்டி விகிதம் இலங்கை போன்ற நாடுகளால் ஏற்க முடியாத அளவிற்கு மிகப்பெரியதாக இருந்தது. ஆனால், அதை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு இலங்கையை திசை திருப்பியது சீனா. இந்த கடனைத் திருப்பித் தரும் திறன் இல்லை என்ற நிலை இலங்கைக்கு வந்தவுடன், அதற்கு பதிலாக செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது.

இந்தியாவிற்கு எதிராக போர் என்ற சூழல் ஏற்பட்டால், இந்த துறைமுகம் சீனாவிற்கு தன் ராணுவத்தை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இதுமட்டுமல்லாமல், இப்படி இன்னும் பல கடன்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த கடன் சுமையிலிருந்து தன்னைக் காக்க இலங்கை மற்ற நாடுகளின் உதவியை நாடிய வெளையில், பிரதமர் நரெந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான இந்திய அரசு அந்த உதவியைச் செய்துள்ளது. இது தவிர பல கட்டுமானப் பணிகள், கோவிட் நிவாரணப் பணிகள் என பல விதங்களில் இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது.

ALSO READ: உதவிக்கரம் நீட்டும் இந்தியா: கோவிட்-19 நிவாரணத்திற்காக இலங்கையுடன் Currency Swap!!

இந்த பின்னணியில், இலங்கை தற்போது இந்தியாவிற்கு முதலிடம் என்ற கொள்கையை முன்னிருத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களில், மற்றொரு நாடு இந்தியா மீது தனது அன்பையும் புகழையும் காட்டிய இரண்டாவது நிகழ்வு இது. தென்கிழக்கு ஆசியாவின் மற்றொரு தீவு நாடான மாலத்தீவுகள் (Maldives) சமீபத்தில் சீனாவின் அச்சுறுத்தும் கடன்-பொறி இராஜதந்திரத்தின் பிடியிலிருந்து வெளியேற உதவுவதற்காக இந்திய அரசாங்கம் அரை பில்லியன் கடன் உதவியை அளித்தது. இது மாலத்தீவுகளுக்கு பேருதவியாக இருந்தது.

பிரதமர் மோடியும் அவரது வெளியுறவுக் கொள்கையும் நாட்டின் தேசிய நலனுடன் ஒத்துப்போகின்றன. அண்டை நாடுகள் மீதான பிடியை இந்தியா இழந்து வருவதாக தொடர்ந்து கிண்டல் செய்த அவரது எதிர்ப்பாளர்களுக்கு இலங்கையின் ‘இந்தியாவிற்கு முதலிடம் கொள்கை’ ஒரு மென்மையான ஆனால் உறுதியான செய்தியை வழங்கியுள்ளது.

மாலத்தீவு மற்றும் இலங்கை மீண்டும் இந்தியாவுடன் இணக்கமாகி வருவதால், இதன் மூலம் நேபாளத்தில் உள்ள ஓலி அரசுக்கும் நிச்சயமாக ஒரு பாடம் கிடைக்கும். சீனா இந்த சிறிய நாடுகளுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் கொள்கையை பின்பற்றுகிறது. அப்படி ஏமாறும் நாடுகள் இறுதியில் உதவிக்காக இந்தியாவிடமே திரும்புகின்றன. அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் இந்தியாவும் தன்னை நம்பி வரும் நாடுகளுக்கு எப்போதும் உதவ மறுப்பதில்லை!!

ALSO READ: உதவிக்கரம் நீட்டும் இந்தியா: வட கொரியாவுக்கு 1 மில்லியன் டாலர் மருத்துவ உதவி!!

Trending News