மும்பை கனமழையால் சேற்றில் விமானம் சிக்கியது!

Last Updated : Sep 20, 2017, 08:44 AM IST
மும்பை கனமழையால் சேற்றில் விமானம் சிக்கியது! title=

மும்பையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணத்தால் சுமார் அரை மணிநேரம் மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. 

நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் அதன் ஓடுதளப்பாதையில் இருந்து விலகி சேற்றில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கனமழை காரணமாக ஓடுதளப்பாதை ஈரமாக இருந்ததால், விமானம் சற்று விலகி சேற்றில் சென்று சிக்கிக்கொண்டது. 

இதனால், விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பதற்றமடைந்தனர். உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இதனால், விமான நிலையத்தின் வழக்கமான நடவடிக்கைகள் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. மேலும், மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 

இதற்கிடையே அடுத்த 72 மணிநேரம் வரை மும்பையிலும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் மும்பையில் இன்று(புதன் கிழமை) அனைத்து பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Trending News