ராஜ்ய சபாவில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு... கடுப்பான ஜெகதீப் தன்கர் - காரணம் என்ன?

Jagdeep Dhankhar: மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அதிருப்தி தெரிவித்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 8, 2024, 01:12 PM IST
  • வினேஷ் போகத் விவகாரத்தை விவாதிக்க எதிரிக்கட்சிகள் கோரிக்கை
  • அனுமதி அளிக்கப்படாததால் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி
  • டெரெக் ஓ பிரையனின் நடத்தையை ஜெகதீப் தன்கர் கண்டித்தார்.
ராஜ்ய சபாவில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு... கடுப்பான ஜெகதீப் தன்கர் - காரணம் என்ன? title=

Jagdeep Dhankhar Parliament Latest Updates: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இருப்பினும், விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.  இதைத் தொடர்ந்து அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்ய சபாவில் நடந்த அமளிக்கு நடுவே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யான டெரெக் ஓ பிரையனின் நடத்தைக்காக, குடியரசு தலைவரும் அவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவரை கடுமையாக திட்டியதும் பரபரப்பை உண்டாக்கியது.

வினேஷ் போகத் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது, வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பது அறிந்துகொள்வது மிக முக்கியமாகும் எனத் தெரிவித்தார். இதற்கு, மொத்த நாட்டு மக்களுமே மன வேதனையில் இருப்பதாகவும், இந்த விவாகாரத்தை அரசியலாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வினேஷ் போகத் விவகாரம்

ஜெகதீப் தன்கர் இதுகுறித்து,"அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) மட்டும்தான் இதயத்தில் இருந்து ரத்தம் வருவதாக நினைக்கிறார்கள். ஒட்டுமொத்த நாடும் மனவேதனையில் இருக்கிறது. குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் நான் உள்பட அனைவருக்கும் அந்த வலியை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்குவதன் மூலம் அந்த பெண்ணுக்கு (வினேஷ் போகத்) பெரிய அவமரியாதை ஆகும். அவர் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது" என்றார். 

மேலும் படிக்க | வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சதி என காங்கிரஸ் புகார்

மேலும்,"ஹரியானா அரசு உடனே அவரை பதக்கம் வென்றவராக கருதி அனைத்து விதமான பொருளாதார சலுகைகளை வழங்குவதாக அறிவித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" என்றார். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

கடுப்பான ஜெகதீப் தன்கர்

ஒரு கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யான டெரெக் ஓ பிரையனின் நடத்தையால் ஆத்திரமடைந்த ஜெகதீப் தன்கர், "உங்கள் நடத்தை இந்த அவையில் அசிங்கமாக இருக்கிறது. உங்களின் செயலை கண்டிக்கிறேன். அடுத்த முறை உங்களை வெளியே அனுப்ப நேரிடும். அவை மேசையில் இருந்து இப்படி சத்தம் போடக்கூடாது.

அநாகரீகமான நடத்தையை மேற்கொள்ளாதீர்கள். ஜெய்ராம் ரமேஷ் அவர்களே சிரிக்காதீர்கள். உங்களின் பழக்கம் எனக்கு நன்றாக தெரியும். சில உறுப்பினர்கள் தவறான கருத்துக்களை கூறுகின்றனர். நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் உறுப்பினர்களின் நடத்தையால் நான் வருத்தப்படுகிறேன்" என்றார். முன்னதாக, சில நேரங்களில் இந்த பதவியில் இருக்க முடியவில்லை என கூறிவிட்டு இந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை காரணமாக கூறினார். தொடர்ந்து அவையில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார். 

தலைவர்களுடன் சந்திப்பு

அதன்பின்னர், வினேஷ் போகத் விவகாரத்தை விவாதிக்க அனுமதி தரப்படாத நிலையில், எதிர்க்கட்சிகளும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஜெகதீப் தன்கர் மீண்டும் அவைக்கு வந்தார். அவையை மதியம் 2 மணிவரை ஒத்திவைத்த ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையில் இன்றைய நடத்தைகள் குறித்து மதியம் 1.30 மணிக்கு தலைவர்களுடன் சந்திப்பு நடத்த உள்ளார்.

மேலும் படிக்க | உருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News