உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவை புறக்கணித்த ராகுல், சோனியா!

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா, ராகுல் காந்தி கடிதம்!!

Last Updated : Nov 28, 2019, 07:03 PM IST
உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவை புறக்கணித்த ராகுல், சோனியா! title=

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா, ராகுல் காந்தி கடிதம்!!

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியானது முதற்கொண்டு அரசியலில் பெரும் குழுப்பங்களும், திருப்பமும் ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்த சிவசேனா முதலமைச்சர் பதவிக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகி தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.  இந்நிலையில் சிவசேனாவுக்கு ராசியான மைதானமாக கருதப்படும் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தற்போது உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது. 

மேலும், டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதேபோல் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தபோது, பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சரானார் உத்தவ் தாக்கரேமும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் பதவி ஏற்பு விழா பதவி ஏற்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புமத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு பதவி ஏற்பு விழாவிற்காக பல்லாயிரம் பேர் திரண்டனர். ஆனால், மகாராஷ்ட்ரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி தெரிவித்துள்ளனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் மூலம் தெரிவித்த்துள்ளார்.  

 

Trending News