காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனை தொடர்பாக வெளிநாட்டிற்கு சென்று சமீபத்தில் நாடு திரும்பினார். தொடர்ந்து, சசி தரூர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் தலைவராவதற்கு சோனியா காந்தி ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் 2 ஆண்டுகள் கழித்து அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் செப்.22ஆம் தேதியும், வேட்பு மனு தாக்கல் செய்ய செப்.24ஆம் தேதியும், செப். 30ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு அக். 17ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக். 22ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில், மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு, சுமார் 2 ஆண்டுகளாக சோனியா காந்திதான் இடைக்கால தலைவராக நீடிக்கிறார். தற்போது, கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்னும் இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸின் உயர் பதவிகளை வகிக்க தொடர்ந்து காந்தி குடும்பம் மறுப்பு தெரிவித்து நிலையில், அதன் மூத்த தலைவர்கள் ஸ்திரமான தலைமையை வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில், ராகுல் காந்தி போட்டியிடாவிட்டால், சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என முதலில் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், காந்தி குடும்பம் தொடர்ந்து உயர் பதவியில் நீடிக்க வேண்டும் என ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத் மாநில காங்கிரஸார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
எனவே, சோனியா காந்தி உடனான சசி தரூரின் இன்றைய சந்திப்பு அரசியல் சூழலில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூரின் கோரிக்கைக்கு சோனியா காந்தி, ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், காங்கிரஸ் கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என நீண்ட குரல் கொடுத்து வருகிறார். கட்சி நீர்வாகத்தில் மாற்றம் வேண்டும் என தலைமைக்கு கடிதம் எழுதிய G-23 என்ற 23 தலைவர்களுள் சசி தரூரும் ஒருவர்.
மேலும், காங்கிரஸின் மூத்த தலைவர்களான கபில் சிபல், அமரீந்தர் சிங், சமீபத்தில் குலாம் நபி ஆசாத் ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகியிருந்தனர். ஆனால், சசி தரூர் கட்சிக்குள் இருந்துக்கொண்டே, அதனை சீரமைக்க வேண்டும் என நினைப்பதாகவும், எனவேதான் சோனியா காந்தி அவருக்கு ஆதரவு கரம் நீட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | ஜார்ஜ் பொன்னையாவை அடுத்து இந்து சாமியாரை சந்தித்த ராகுல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ