"மக்களின் நலன்களை புறக்கணித்த கட்சி காங்கிரஸ்" என மோடி தாக்கு...

நாட்டு மக்கள் மீது மட்டுமல்லாமல் சொந்தக் கட்சித் தலைவர்களின் முதுகிலேயே குத்தியக் கட்சிக் காங்கிரஸ் என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2018, 07:43 PM IST
"மக்களின் நலன்களை புறக்கணித்த கட்சி காங்கிரஸ்" என மோடி தாக்கு... title=

நாட்டு மக்கள் மீது மட்டுமல்லாமல் சொந்தக் கட்சித் தலைவர்களின் முதுகிலேயே குத்தியக் கட்சிக் காங்கிரஸ் என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்! 

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடி அங்கு சிந்தவாரா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தி வருவதாகக் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

பசுவை பாதுகாப்போம் என மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்துள்ள காங்கிரஸ், கேரள சட்டப்பேரவைத் தேர்தலின் போது அந்த வாக்குறுதியை அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ஆதார் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம் ஊழலை தடுத்து மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு நாட்டு மக்கள் மீது மட்டுமல்லாமல் தனது சொந்தக் கட்சித் தலைவர்களின் முதுகிலேயே குத்தியக் கட்சிக் என கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி. 

இதற்க்கு முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள மகாசமுந்த் என்னுமிடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரத்தின் பொது, தொலைபேசி வங்கிச் சேவையால் வங்கிகள் அழிந்துவிடும் எனக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில் தொலைபேசியில் பேசித் தொழிலதிபர்களுக்குக் கடன்கொடுக்கச் சொன்னதையும், கடன்பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடியதால் வங்கிகள் சீர்குலைந்ததையும் மோடி சுட்டிக்காட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை எனத் தெரிவித்தார்.

நான்கு தலைமுறையாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைப் பற்றித் தான் சிந்தித்ததாகவும், மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தினரைத் தவிர வேறுயாரையாவது தலைவராக்க முடியுமா என்றும் மோடி சவால் விடுத்துள்ளது குறிப்பிடதக்கது. 

 

Trending News