சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Last Updated : May 9, 2019, 10:24 AM IST
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் title=

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த எஸ்.கியூ 406 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 228 பயணிகள் இருந்தனர். 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ 380- 800 ரக விமானம், சக்கரத்தின் முகப்பு பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பத்திரம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டது. 

Trending News