செபி தலைவர் மாதபி பூரிக்கு மேலும் சிக்கல்.. அதிகாரிகள் நிதி அமைச்சகத்திடம் புகார்!

Toxic Work Culture In SEBI: செபி அதிகாரிகள் உயர் நிர்வாகத்திற்கு எதிராக நிதி அமைச்சகத்திடம் கடுமையான புகார் அளித்தனர். கூச்சலிடுவது, திட்டுவது, பகிரங்கமாக அவமானப்படுத்துவது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 4, 2024, 03:22 PM IST
செபி தலைவர் மாதபி பூரிக்கு மேலும் சிக்கல்.. அதிகாரிகள் நிதி அமைச்சகத்திடம் புகார்! title=

Madhabi Puri Buch: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) அதிகாரிகள் நிதி அமைச்சகத்திற்கு ஒரு முக்கியமான கடிதத்தை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் ஏராளமான குற்றசாற்றுகள் வைக்கப்பட்டு உள்ளது. செபி அமைப்பில் பணிபுரியும் தலைமை நிர்வாகத்தினர், அலுவலகத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. மேலும் மூலதனம் மற்றும் சந்தை ஒழுங்குமுறைக்கு இணங்க நாசவேலை கலாச்சாரத்தை ஊக்குவிப்பது குறித்தும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பணியின் போது பொறுப்பற்ற முறையில் கூச்சலிட்டதாகவும், திட்டியதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி செபி (SEBI) அதிகாரிகள் எழுதிய கடிதத்தில், “ஆலோசனை கூட்டங்கள் நடக்கும் போது எல்லோர் முன்னிலையிலும் கூச்சலிடுவதும், திட்டுவதும், பகிரங்கமாக அவமானப்படுத்துவதும் சகஜமாகிவிட்டது எனக் கூறப்பட்டு உள்ளது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எண்களின் வேலை-வாழ்க்கை இடையிலான சமநிலை சீர்குலைந்து உள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தங்கள் புகார்களை நிர்வாகம் கேட்காததால், நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செபியின் வரலாற்றில் இதுபோல நடப்பது முதல் தடவை என அதிகாரிகள் தங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செபி தலைவர் மாதபி பூரி புச் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதானி தொடர்பான விவகாரம் மற்றும் அவரது ஐசிஐசிஐ வங்கி அவருக்கு வழங்கிய சம்பளம் குறித்து செபி தலைவர் மாதபி பூரி எதிராக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதற்கிடையில், ஜீ குழும நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா நேற்று (செவ்வாய்கிழமை) செபி தலைவர் மாதபி பூரி புச் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

ஆனால் செபி தலைவர் மாதபி பூரி புச் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். அதேநேரம் ஊழியர்களுடனான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக செபி தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ஒழுங்குமுறை அதிகாரி மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார். ஊழியர்களின் பிரச்சினைகலுக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருவதாகும் கூறப்ப்ட்டுள்ளது.

செபியில் கிரேடு ஏ மற்றும் அதற்கு மேலான பதவியில் சுமார் 1,000 அதிகாரிகள் உள்ளனர். அதில் பாதி பேர், அதாவது சுமார் 500 பேர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

'செபி அதிகாரிகளின் குறைகள்-மரியாதைக்கான அழைப்பு' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், புட்ச் தலைமையிலான தலைமைக் குழு உறுப்பினர்களுடன் "கடுமையான மற்றும் தொழில்முறையற்ற மொழியை" பயன்படுத்துகிறது. அவர்களின் "நிமிடத்திற்கு நிமிட செயல்பாடுகளை" கண்காணித்து, "இலக்குகளை மாற்றுவதன் மூலம் நம்பத்தகாத பணி இலக்குகளை" சுமத்துகிறது.

மேலும் படிக்க - செபி தலைவர் மீது டாக்டர் சுபாஷ் சந்திராவின் கடுமையான குற்றச்சாட்டுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News