Chhatrapati Shivaji Statue Collapsed: கடலோர மாவட்டமான சிந்துதுர்க் மகாராஷ்டிராவின் (Maharashtra) கொன்கன் பகுதியில் அமைந்துள்ளது. அரேபிக் கடலோரம் உள்ள இந்த மாவட்டத்தின் மால்வான் நகரில் அமைந்துள்ள ராஜ்கோட் கோட்டை (Rajkot) 1664ஆம் ஆண்டு முதல் 1667ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது.
இந்த கோட்டைக்கு அருகே மாமன்னர் சத்ரபதி சிவாஜிக்கு 35 அடி உயரத்திலான சிலை (Chhatrapati Shivaji Statue) ஒன்று நிறுவப்பட்டது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அன்று கடற்படை தினத்தை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி (PM Modi) திறந்துவைத்தார். மேலும், அன்று ராஜ்கோட் கோட்டை நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
9 மாதங்களே ஆன சிலை...
திறக்கப்பட்டு வெறும் 9 மாதங்களே ஆன சிவாஜியின் அந்த சிலை இன்று மதியம் 1 மணியளவில் கீழே விழுந்து உடைந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சிலை இவ்வளவு விரைவாக உடைந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அதன் தரத்தில் மாநில அரசு சுத்தமாக கவனம் செலுத்தவே இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
KADI NINDA ALERT | The 35-foot statue of Chhatrapati Shivaji Maharaj, proudly unveiled by coalition dealer, Narendra Modi, at a fort in Sindhudurg district eight months ago collapsed today.
We humbly request everyone to do 'Kadi Ninda' to strongly condemn the reckless act of… pic.twitter.com/KKuWyYcLuH
— Congress Kerala (@INCKerala) August 26, 2024
மேலும் படிக்க | சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர் தர்ஷன்? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!
கடந்த இரண்டு மூன்று தினங்களாக, சிந்துதுர்க் மாவட்டத்தில் (Sindhudurg District) பலத்த மழையும், அதிவேகத்தில் காற்றும் விசியதாக கூறப்பட்டாலும், சிலை கீழே விழுந்து உடைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வல்லுநர்கள் உறுதி செய்வார்கள் என கூறப்படுகிறது. மூத்த காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, சிலையின் சேதத்தை மதிப்பீடு செய்தனர்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சரத் பவார் தரப்பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல்,"மாநில அரசின் அலட்சியத்தாலும், சரியான கவனம் செலுத்தாததாலும்தான் இந்த சிலை சரிந்துள்ளது. எனவே இதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். சிலையின் தரத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை. சிலையை திறப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பதற்கு மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தியது. தற்போதைய மகாராஷ்டிர அரசு புதிய டெண்டர்களை மட்டும் போட்டு, கமிஷன்களை வாங்கிக்கொண்டு அதன்படி ஒப்பந்தம் கொடுக்கிறது" என குற்றஞ்சாட்டினார்.
அதேபோல், உத்தவ் தாக்கரே தரப்பின் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ வைபவ் நாயக்கும் மாநில அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தார்."மாநில அரசு தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. சிலையை உருவாக்குவதிலும், அமைப்பதிலும் தொடர்புடையவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தார்.
அமைச்சர் கூறியது என்ன?
இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிர அமைச்சர் தீபக் கேசர்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"சம்பவம் குறித்த அனைத்து விவரங்களும் என்னிடம் இல்லை. இருப்பினும், சிந்துதுர்க் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ரவீந்திர சவான், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
சிலை இருந்த அதே இடத்தில் புதிய சிலை அமைக்க நாங்கள் உறுதிசெய்துள்ளோம். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை, கடல் கோட்டையை கட்டுவதில் சிவாஜி மகாராஜின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விரைவாகவும் திறம்படவும் தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என உறுதியளித்தார்.
மேலும் படிக்க | நடிகர் சித்திக் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்! பிரபல நடிகை குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ