1 லட்ச ரூபாய்க்கு போனுக்கு... 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக்கிய அதிகாரி - எப்படி தெரியுமா?

மொபைல் போனுக்கு மதிப்பு அதிகமா, தண்ணீருக்கு மதிப்பு அதிகமா என்று கேட்டால், நீரின் விலை மதிப்பற்றது என்பதுதான் பதிலாக இருக்கும். அந்த வகையில், 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக்கிய அரசு அதிகாரி குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 26, 2023, 05:22 PM IST
  • ரூ. 96 ஆயிரம் மதிப்பு வாய்ந்த சாம்சங் S23 மொபலை அந்த அரசு அதிகாரி வைத்துள்ளார்.
  • அதை 15 அடியில் உள்ள நீர் தேக்கத்தில் தவறுதலாக அவர் போட்டுள்ளார்.
  • மூன்று நாள்கள் போராடி அந்த மொபைலை எடுத்துள்ளார்.
1 லட்ச ரூபாய்க்கு போனுக்கு... 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக்கிய அதிகாரி - எப்படி தெரியுமா? title=

சுமார் 1 லட்ச ரூபாய் மொபைல் போனுக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரியின் செயல் பலரின் கண்டனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அது எப்படி, பல லட்சம் தண்ணீரை மொபைலுக்காக வீணடித்தார் என சந்தேகம் வருகிறதா அல்லவா, நான் நாம் ஏற்கவே முடியாத சம்பவத்தை சத்தீஸ்கரில் ஒரு அரசு அதிகாரி செய்துள்ளார். 

சாம்சங் S23

சத்தீஸ்கரை சேர்ந்த உணவு பாதுகாப்பு ஆய்வாளரான ராஜேஷ் விஷ்வாஸ் என்பவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை கொண்டாட உள்ள கெர்கட்டா பரல்கோட் அணைக்கட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தவறுதலாக தனது, ரூ. 96 ஆயிரம் மதிப்பு வாய்ந்த சாம்சங் S23 மாடல் மொபைல் 15 அடி ஆழமுள்ள நீரில் விழுந்துள்ளது. 

மேலும் படிக்க | சோழ காலத்து செங்கோல்: போலியா... சுதந்திர அடையாளமா... - தலைவர்கள் சொல்வது என்ன?

21 லட்சம் லிட்டர் நீர்

பீதியடைந்த விஸ்வாஸ், அந்த அணைக்கட்டு நிர்வாகிகளை அணுகி நீரில் மூழ்கிய தனது தொலைபேசியை மீட்பதற்கான வழிகள் குறித்து கேட்டுள்ளார். இறுதியில், நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்ற 30-குதிரைத்திறன் கொண்ட பம்ப் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக நீர்ப்பாசன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சேமிக்கப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டது. ஒரு நாளில் 21 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் இந்த தேடுதல் மூன்று நாட்கள் முழுவதும் நடந்துள்ளது. 

1,500 ஏக்கர் பாசனம்

மூன்று நாட்களுக்குப் பிறகு, 41 ஆயிரத்து 104 கன மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு தொலைபேசி மீட்கப்பட்டது. இந்த விலைமதிப்பற்ற நீர் சுமார் 1,500 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும்.

10 அடியாக குறைந்தது

இருப்பினும், மூன்று நாள் நீரில் இருந்த விஸ்வாஸின் மொபைல் மீட்கப்பட்டாலும் அது வேலை செய்யவில்லை. ஆனால் அது முன்னரே தெரிந்திருக்கும் அல்லவா?. நீருக்கடியில் மொபைல் நீண்ட நேரம் இருந்தால் வேலையே செய்யாது. இந்த தேடுதலுக்கு பின் அந்த அணையின் நீர்மட்டம் 10 அடியாக குறைந்தது.

கழிவு நீர்?

ராஜேஷ் விஸ்வாஸ் இச்சம்பவம் குறித்து கூறுகையில்,"வெளியேற்றப்பட்ட நீர், பாசனத்திற்கு தகுதியற்ற கழிவு நீர். தொலைந்த போன் தனது தனிப்பட்ட மொபைல் என்பதால் அதில் முக்கியமான தொடர்புகள் இருந்ததால் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இடைநீக்கம்

கங்கேர் நீர்ப்பாசனத்துறை அதிகாரியால் 3-4 அடி தண்ணீரைக் காலி செய்ய வாய்மொழியாக அனுமதி வழங்கப்பட்டது. அணையின் ஒரு பகுதியாக பாசனத்திற்கு தகுதியற்ற கழிவு நீர் தேங்கி இருந்தது. டீசல் பம்ப் மூலம் தண்ணீர் காலி செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் செலவு ரூ.7 ஆயிரம் - 8 ஆயிரம். எனது செயலால் எந்த விவசாயியும் பாதிக்கப்படவில்லை,” என்றார் விஸ்வாஸ். இந்த சம்பவம் தலைப்புச் செய்தியாக மாறியதை அடுத்து, விஸ்வாஸ் இன்று (மே 28) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா சர்ச்சைகள்! மடாதிபதிகள் உள்ளே குடியரசு தலைவர் வெளியே!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News