RPF Constable Shooting: மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேரை இன்று (ஜூலை 31) காலையில் சுட்டுக் கொன்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் (12956) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் ஏஎஸ்ஐ உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிசிபி வடக்கு ஜிஆர்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே பாதுகாப்புப் படை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையின் கான்ஸ்டபிளும், ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவருமான சேத்தன் சிங், தனது தானியங்கி ஆயுதத்தில் இருந்து காலை ஐந்து மணியளவில் துப்பாக்கியால் சுட்டதில் ரயில்வே பாதுகாப்பு படையின் துணை உதவி ஆய்வாளரும், பாதுகாப்பு பணியின் பொறுப்பாளருமான டிகா ராம் மீனா மற்றும் மும்பை செல்லும் வழியில் ரயிலில் இருந்த மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர். மூவரும் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆயுதங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு இருக்கா? இதோ முக்கிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
கான்ஸ்டபிள் தனது சக ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், சிலர் தலையிட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது. அதிகாலை 5 மணியளவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு பயணிகள் விழித்தனர். கான்ஸ்டபிள் கடந்த சில நாள்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
#UPDATE | Four casualties, including the ASI have been reported in the firing incident inside the Jaipur Express train (12956). The accused has been arrested. DCP North GRP has been informed: Railway Protection
Force— ANI (@ANI) July 31, 2023
சீனியரைக் கொன்ற பிறகு, கான்ஸ்டபிள் மற்றொரு பெட்டிக்கு சென்று மூன்று பயணிகளை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகளை கூறியுள்ளனர். பால்கர் ரயில் நிலையத்தை கடந்ததும் ஓடும் ரயிலுக்குள் RPF கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூடு நடத்தினார். நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தஹிசார் ஸ்டேஷன் அருகே ரயிலில் இருந்து குதித்தார் என்று மேற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு ரயில்வே போலீஸ் மற்றும் ஆர்பிஎஃப் அதிகாரிகள் உதவியுடன் மீரா ரோட்டில் போலீஸாரால் அவர் பிடிக்கப்பட்டார்.
மேலும் படிக்க | படகு கவிழ்ந்து விபத்து: வெளியானது வீடியோ காட்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ