16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்... பிறந்தநாள் அன்று நடந்த துயரம்!

பிறந்தநாள் அன்று மாரடைப்பால் உயிரிழந்த 16 வயது சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெற்றோர்கள் கேக் வேட்டி, பாடல் பாடிய சம்பவம் நடந்தேறியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 21, 2023, 06:06 PM IST
  • அந்த சிறுவனுக்கு மே 18ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
  • அடுத்த நாள் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
  • இறுதி ஊர்வலத்தில் மொத்த கிராமமே கலந்துகொண்டுள்ளது.
16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்... பிறந்தநாள் அன்று நடந்த துயரம்! title=

16 வயது சிறுவன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 19ஆம் தேதி அன்று தெலங்கானாவில் 16 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தான், குறிப்பாக அன்று அவனது பிறந்த நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனம் உடைந்த பெற்றோர்கள் அந்த சிறுவன் ஆசைப்பட்டது போல் பிறந்தநாள் கேக்கை வெட்டி, தங்கள் சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவனது உடலுக்கு அருகில் வைத்திருந்தனர். 

தெலங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள பாபாபூர் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் சச்சின், மே 18 அன்று தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆசிபாபாத் நகரில் ஷாப்பிங் செய்ய வெளியே சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மாஞ்சேரிய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (மே 19) உயிரிழந்தார். 

மேலும் படிக்க | புதிய நாடாராளுமன்றத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்: ராகுல் காந்தி

சச்சினின் உடல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. துக்கமடைந்த குடும்பத்தினர் துக்கத்தில் இருந்த போதும், சச்சினுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடினர். பெற்றோர் - குன்வந்த ராவ் மற்றும் லலிதா,  அக்கம்பக்கத்தினர், குழந்தைகள் மற்றும் உறவினர்களை அழைத்து சச்சினின் கைகளைப் பிடித்து, மே 19ஆம் அன்று நள்ளிரவுக்குப் பிறகு கேக் வெட்டினர். 

குழந்தைகள் சச்சினுக்கு பிறந்தநாள் பாடலைப் பாடினர். உள்ளூர் கிராம மக்கள் அவரது நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றினர். நண்பர்கள் சச்சினின் புகைப்படங்களுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று ஒரு பெரிய பேனரை வைத்துள்ளனர். சச்சின் தனது பிறந்தநாளைக் கொண்டாட ஆவலுடன் இருந்ததாகவும், அதில் உற்சாகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும், பிறந்தநாளாக கொண்டாட்டம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் துக்க நாளாக மாறியது. இறுதிச் சடங்கில் முழு கிராமமும் கலந்து கொண்டு பாபாபூரில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. சச்சின், அந்த தம்பதியரின் மூன்றாவது மகன் ஆவார்.

16 வயது சிறுமியும்...

சச்சினுக்கு ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இளம் வயதில் மாரடைப்பு என்பது சமீப காலங்களில் அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனினும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை உள்ளிட்டவை இந்த பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவலாம். 

சச்சினுக்கு ஏற்பட்ட சம்பவத்தை போன்று மத்திய பிரதேசத்திலும் கடந்த ஜனவரி மாதம் ஒரு சம்பவம் நடந்தது. பள்ளியில் குடியரசு தின ஒத்திகையின்போது மயக்கம்போட்டு விழுந்த 11ஆம் வகுப்பு மாணவி, மாரடைப்பால் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு நடிகர், நடிகைகளும் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழப்பது அதிகமாகி வருவதாக தெரிகிறது.  

 

மேலும் படிக்க | MiG-21 விமானத்தை பயன்படுத்த தடை... விமான படை எடுத்துள்ள முக்கிய முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News