அரசியல் திருப்பம்! Shiv Sena தலைவர் சஞ்சய் ரவுத் NCP தலைவர் சரத் பவாரை சந்தித்தார்

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரவுத், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை சந்திக்க, அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 8, 2019, 04:41 PM IST
அரசியல் திருப்பம்! Shiv Sena தலைவர் சஞ்சய் ரவுத் NCP தலைவர் சரத் பவாரை சந்தித்தார்  title=

மும்பை: மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜகவும் சிவசேனாவும் கடுமையான மோதலில் ஈடுப்பட்டு வரும் நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை சந்திக்க, அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இரு கட்சிகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் முதலமைச்சராக இருப்பார். மகாராட்டிராவில் அமையும் அரசாங்கம் பாஜக அரசாக தான் இருக்கும் என்று திட்ட வட்டமாகக் கூறினார்.

இதனையடுத்து, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரவுத், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை சந்திக்க, அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். இந்த சந்திப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்தும், அதற்கான ஆதரவை என்சிபி தரவேண்டும் என்றும் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சந்திப்பில் என்ன ஆலோசனை செய்யப்பட்டது என்பது குறித்து, இரண்டு கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பிறகு தான் தெரிய வரும். 

மறுபுறம், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் பரப்பரப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

சிவசேனா 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் பிடிவாதமாக உள்ளது, ஆனால் பாஜக, 50:50 சூத்திரத்தை கைவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக நியமிக்க வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News