லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் குடிசை ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதிகாலை 2 மணியளவில் அந்த குடிசையில் வசித்து வந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை உதவி ஆணையர் (கிழக்கு) லூதியானா சுரிந்தர் சிங், "அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் குப்பைகளை அள்ளுவதுதான். அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும், திப்பா சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கு முற்றத்திற்கு அருகில் உள்ள குடிசையில் வசிப்பதாகவும் கூறினார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றார்.
தீ விபத்தில் இறந்தவர்கள் சுரேஷ் (54), ரவுர் தேவி (50), அவர்களின் மகள்கள் ராக்கி (15), மனிஷா (10), சந்தா (8), கீதா (6), மகன் சன்னி (2) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள போகோபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Punjab | Seven members, including 5 children of a family, were burnt alive in a fire that broke out in their hut in Ludhiana. The incident occurred at around 2 am when all the family members were sleeping in the shanty: Baldev Raj, Sub Inspector, Police Station Tibba pic.twitter.com/E1zPfjR7gR
— ANI (@ANI) April 20, 2022
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR